ஆனந்த விகடனின் ஹிந்து விரோதம்

அன்புடையீர் வணக்கம்.

ஆனந்த விகடன் ஏப்ரல் 20, 2017 இதழில் இந்தியா மக்களுக்கா மதத்துக்கா?” என்ற தலைப்பில் ‘மீனாமயில்’ எழுதியதாக ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரை முழுவதும் ஹிந்து இயக்கங்களின் மீது புழுதி வாரி இறைக்கப்பட்டுள்ளது. கட்டுரை எழுதியவர் ஒன்று நக்ஸலைட் ஆக இருக்கவேண்டும் அல்லது முஸ்லிம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். ஆனந்தவிகடன் நேற்று முளைத்த ஒரு காளான் பத்திரிகை இல்லை. இது ஒரு பாரம்பரியமான இதழ். அப்படிப்பட்ட ஒரு பத்திரிகையில் இன்று நக்ஸலைட்வாதிகளும் இடதுசாரிகளும் நுழைந்திருப்பது ஆபத்தானது. நிர்வாகம் இவர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும்.

கட்டுரையில்… ‘மதம் மாறுவது நமது தார்மீக உரிமை, மதம் மாற்றம் ஒரு சமூகப் புரட்சி, மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது’ என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது.

முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட வேலூர் அரவிந்த் ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன் போன்ற ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் பெண், பணம் போன்ற விவகாரத்தால் தான் கொல்லப்பட்டனர் என்று அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்துள்ளார் கட்டுரையாளர்.

ஹிந்துத்துவ பலிதானிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்த பிரபல வார இதழ் செய்த இந்த முயற்சியைக் கண்டனம் செய்ய சென்னை ‘ஆனந்த விகடன்’ அலுவலகம் முன்பு பெருந்திரளாக ஹிந்து முன்னணித் தொண்டர்கள் கூடி ஆவேசக்குரல் எழுப்பி கைதாகியுள்ளார்கள். ஹிந்து சமுதாயம் அந்தத் தொண்டர்களைப் பாராட்டுகிறது.