உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், கடந்த ஏப்ரல் 16ல், 26 வது நீதிபதி சுனந்தா பண்டாரே நினைவு சொற்பொழிவை நிகழ்த்தியபோது, “ரிக்வேதம், பெண்களுடன் நீடித்த நட்புறவை கொள்ள வேண்டாம், ஏனெனில் அவர்கள் கழுதைப்புலியை போன்றவர்கள்” என கூறியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி, ரிக்வேதத்தை தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோரியுள்ளது. நீதிபதி நரிமன் சட்டத்தில் வேண்டுமென்றால் நிபுணராக இருக்கலாம், ஆனால் வேதங்களில் அல்ல எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக உலக ஹிந்து அறக்கட்டளை என்ற அமைப்பும் இதே கருத்தை வலியுறுத்தி, நீதிபதி நரிமன், தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டது.