குஜராத், அமதாபாத்தில், இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின், 95வது ஆண்டுக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் மோடி, ‘பாரதம், ஜனநாயகத்தின் தாயாக விளங்குவதில் பெருமிதம் கொள்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, நமது பாரத மக்களிடம் ஜனநாயக பண்புகள் தொடர்ந்து வருகின்றன. சர்வதேச தரத்துக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ள நமது நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கை, நம் எதிர்காலத்துக்கானது. நம் இரண்டாவது ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணனின் கனவுகளை நனவாக்கும் வகையிலும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு, தற்சார்பு இந்தியா பாதையில் பயணிக்க, திறமையுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அறிவு, ஒரு மனிதனுக்கு சுயமரியாதையை அளிப்பதுடன், தன்னுடைய உரிமைகளை பற்றியும் தெரிந்து கொள்ளவைக்கிறது. சம உரிமை வழியாக, சமூக ஒற்றுமை ஏற்பட்டு, நாடு முன்னேற்றமடையும்’ என, அம்பேத்கர் கூறினார். அம்பேத்கர் கூறிய இந்த வழியில் செயல்பட்டு, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் கடமை, பல்கலைக் கழகங்களுக்கு உள்ளது. கல்வி நிறுவனங்கள், உலகையே ஒரு குடும்பமாக கருத வேண்டும். அதே நேரத்தில், பாரதத் தன்மையுடனான கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.