ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தங்கள் அணி வீரர்கள் அணிந்துகொள்ள சீருடையாக ஒரு டீ ஷர்ட் வெளியிட்டார்கள். அதில் இரண்டு தோள்பட்டைகளிலும் போர் முனையில் ராணுவ வீரர்கள் அணியும் சீருடை நிறத்தில் இரண்டு பட்டைகள். ராணுவ வீரர்களின் தியாகத்தை, கடமை உணர்வைப் போற்றும் விதத்தில் இந்தத் தோள்பட்டை பட்டைகளாம்.
அவ்வளவுதான்! வானம் இடிந்து தலையில் விழாத குறை. “இப்படியா கிரிக்கெட்டிலும் சங்கிகளின் தத்து வத்தைப் புகுத்துவது? விளையாட்டில் எதற்கு அரசியல்?…” என்று சமூக வலைத்தளங்களில் குட்டி நாய்கள் குரைக்கத் தொடங்கின. வழக்கமாக இந்தக் குரைப்புகளுக்கு உரியவர்களை இடதுசாரிகள் எனவும், லிபரல்கள் எனவும் குறிப்பிடுவார்கள்.
ராணுவத்துக்கு மரியாதை காட்டுவது சாதாரண தேசபக்தக் கடமை. அது சங்கத் தத்துவம், ஆர்.எஸ்.எஸ் அடையாளம் எனச் சொல்லி வசைபாடுகிறவர்களை வேறு என்ன சொல்வது? கிரிக்கெட் லட்சோப லட்சம் இளைஞர்களை ஈர்க்கக்கூடிய விளையாட்டு என்பதை மறுப்பதற்க்கில்லை. எனவே, கிரிக்கெட் வீரர்களின் சீருடை வாயிலாக நாட்டைக் காக்கும் நல்லாரை நினைவூட்டுவது எப்படி அரசியலாகும்? உளறிக் கொட்டுகிறார்கள், கிளறி மூடுவார்கள். பார்த்துக் கொண்டே இருங்கள்.
டீ-சர்ட்டை சென்றவாரம் வெளியிட்ட சென்னை கிங்ஸ் அணி வீரர் மகேந்திரசிங் தோனி இதற்கு முன்பும் இதுபோல குரைப்பு சத்தம் கேட்டுப் பழக்கப் பட்டவர்தான். 2019ல் பலிதான சின்னம் பொறித்தவிக்கெட் கீப்பர் கையுறையை தோனி அணிந்தபோதும் இதுபோல விவரங்கெட்ட கூப்பாடு கிளம்பியது நினைவிருக்கிறதா?
புல்வாமா பயங்கரவாதத் தாக்கு தலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் நினைவாக ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாரத கிரிக்கெட் அணியினர் ராணுவ வீரர்களின் தொப்பியை அணிந்து ஆடியபோதும் கேட்ட அதே குரைப்பு சத்தம்தான் இதுவும்.