திக்கற்ற பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கடந்த மார்ச் 23ல் கொண்டாடப்பட்ட ‘பாகிஸ்தான் தின’த்தில் பேசிய தூதரகப் பொறுப்பு அதிகாரி அப்தாப் ஹசன், ”பாகிஸ்தான் அனைத்து அண்டை நாடுகளுடனும் குறிப்பாக, பாரதத்துடன் நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறது. நீடித்த அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், நாம் நமது இருதரப்புப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கான பின்னணி என்ன?

பாரதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து வெற்றிகரமாக செயல் பாட்டிற்குக் கொண்டுவந்துவிட்டது. தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, லாப நோக்கற்ற சேவையாக 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இலவசமாக வழங்கி உலகைப் பிரம்மிக்க வைத்திருக்கிறது. அதேசமயம், சீனா செய்த கடந்தகால தவறுகளால் உலக நாடுகளின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளது. அங்கு இயங்கி வந்த பல வர்த்தக, தொழில்நுட்ப நிறுவனங்களும் இன்று பாரதத்திற்கு இடம் பெயர்ந்துள்ளன.

தற்போது பாகிஸ்தானின் பணவீக்க விகிதம் உச்சத்தில் உள்ளது. நாட்டின் மொத்தக் கடன் தொகை சுமார் 113 டிரில்லியன் டாலர்கள் என்கிற சரிசெய்ய முடியாத அளவினை எட்டிப்பிடித்திருக்கிறது. அதாவது, நாட்டின் சொத்து மதிப்பைக் காட்டிலும் கடன் அதிகம். சீனாவையே பந்தாடிய பாரதத்துக்கு தாங்கள் எம்மாத்திரம் என்பதுதான் பாகிஸ்தானிய மக்களின் எண்ணம். தற்போது, ஆசியாவின் வெல்லமுடியாத சக்தியாக பாரதம் உருமாறிவிட்டது. அபிநந்தன் விஷயத்தில் பாரதத்திடம் பாகிஸ்தான் ராணுவம் பணிந்ததும், எல்லைத் தாண்டி வந்து (சர்ஜிகல் ஸ்டிரைக்) பாரதம் நடத்தியத் துல்லியத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதும், பாகிஸ்தானால் எதிர்வினையாற்ற முடியாத சூழல் போன்றவையும் அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல, ராணுவத்தின் மன உறுதியையும் குலைத்துவிட்டது. போதாதக்குறைக்கு பலு சிஸ்தான், கில்ஜித் பல்திஸ்தான், சிந்துதேஷ்என தனி நாடு கேட்டு நடைபெறும் போராட்டங்கள் வேறு.

திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு, கடன்சுமை. தங்கள் ஆபத்பாந்தவனாக அந்நாட்டு மக்கள் தற்போது நம்புவது நமது பாரதத்தை மட்டுமே. பாரதத்துடன் பகைமை, தவறான கொள்கைகள், அரசியல்வாதிகள் ராணுவம் செய்யும் ஊழல்கள், சிலர் வாழப் பலர் செத்து மடியும் போக்கு போன்றவை அங்குள்ள மக்களிடம் நாட்டின்மீதான வெறுப்பை அதிகரித்துள்ளன. ‘பாகிஸ்தானியக் கடனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பாரதத்தின் ஒன்றிணைந்த பகுதியாக மாற நீங்கள் தயாரா?’ என அமித்ஷா பாகிஸ்தானிய மக்களைப் பார்த்துக் கேட்பது போன்று இணையத்தில் வலம்வரும் மீம்ஸ் அங்கு தற்போது மிகப் பிரபலம்.

இதுபோன்ற உலக நடப்புகள் குறித்துத் தெரியாத இங்குள்ள சில மதவாதக் கட்சிகளும் ஜமாத்துகளும் தேர்தல் பிரச்சாரத்தின்போது தங்கள் பகுதியில் பா.ஜ.கவினர் வரக்கூடாது, கொடியைப் பிடிக்கக்கூடாது, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் போடக்கூடாது எனச் செய்துகொண்டிருக்கும் அட்டகாசங்களும், அவர்களுக்குத் துணைபோகும் தி.மு.கவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் செய்யும் நடவடிக்கைகள் அரைவேக்காட்டு அரசியல். வேடிக்கையாக இருக்கிறது.