கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றால் தைவானுடனான அனைத்து தொடர்புகளையும் கைவிட வேண்டும் என தென் அமெரிக்க நாடான பராகுவேவுக்கு சீனா நிர்பந்தம் கொடுத்தது. தற்போது அங்கு கொரோனா பரவலும் வேகமெடுத்துள்ளது. அதனால், பொதுமக்கள் அந்நாட்டு அரசு மீது அதிருப்தியில் இருந்தனர். இதனால் செய்வதறியாது விழித்த அந்த நாட்டுக்கு பாரதம் தற்போது கைகொடுத்துள்ளது. அதன்படி முதல் தவணையாக கொவேக்ஸின் தடுப்பூசியை ஒரு லட்சம் டோஸ் அளவிற்கு பராகுவேவுக்கு அனுப்பிவைத்துள்ளது. அடுத்த தவணையாக மேலும் ஒரு லட்சம் டோஸ் விரைவில் அனுப்பப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.