ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட விரும்பிய திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதற்காக, கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம், தேவஸ்தானம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த யூனியன் பிரதேசத்தின் நிர்வாக கவுன்சில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜம்முவில் 25 ஏக்கர் நிலத்தை, 40 ஆண்டுகால குத்தகைக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இங்கு கோயிலுடன் இணைந்து, பக்தர்களுக்கான வசதிகள், வேத பாடசாலை, தியான மண்டபம், குடியிருப்புகள், வாகன நிறுத்தங்களும் கட்டப்படும். மேலும், இங்கு பள்ளி, மருத்துவமனை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.