மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம் மலங்காட்டில் உள்ள துறவி பாபா மச்சிந்தர்நாத்தின் மகாசமாதி அமைந்துள்ள ஒரு கோயிலில் ஆரத்தி நிகழ்ச்சியின்போது, அங்கு திடீரென அறுபது பேர் கொண்ட ஒரு முஸ்லிம் வன்முறை கும்பல் நுழைந்து ‘அல்லாஹு அக்பர்’ கோஷங்களை எழுப்பினர். இது தங்களுக்கு சொந்தமான ஒரு சூஃபி துறவி தர்கா என்று கூறிய அவர்கள், அங்கிருந்த பக்தர்களையும் தாக்கியுள்ளனர். அங்கிருந்த காவலர்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த முஸ்லிம் கும்பல் காவலர்களிடமும் அராஜகத்தில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி காவலர்கள் அந்த முஸ்லிம் வன்முறையாளர்களை விரட்டினர். தங்களை தாக்கிய நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல மற்றொரு சம்பவத்தில், மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் போலா சௌக்கில் உள்ள ஒரு பழங்கால அனுமன் கோயில் அருகில் ஹோலி தினத்தன்று ஹிந்துக்கள் ஹோலி கொண்டாட்டத்தின்போது, அங்கு வந்த 300 முஸ்லீம் மதவெறி கும்பல், ஹோலிகா தகனத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்து வன்முறை செய்துள்ளனர்.