சென்னை துறைமுகம் தொகுதியின் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான வினோஜ் பி.செல்வம் தி.மு.க ரௌடிகளால் தாக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை மாநகர இணைச் செயலாளரான, கரண் ராஜ் என்பவரின் வீட்டில், மரியாதை நிமித்தமாக வினோஜ் பி.செல்வத்துக்கு இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மாநகர ஹிந்து முன்னணி தலைவர் இளங்கோவுடன் செல்வம் அங்கு வந்திருந்தபோது, தி.மு.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் உட்பட 6 பேர் கொண்ட ஒரு ரௌடி கும்பல் கரண் ராஜ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வினோஜ் பி. செல்வத்தை, ‘நீ இருந்தாதானே எங்க திமுக கட்சியை எதிர்த்து நிற்பாய். உன்னை அடிச்சு காலி பண்ணி விடுவோம்’ என மிரட்டியும் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். அவரை அடிக்கவும் முயன்றனர். வேட்பாளரின் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து வெளியே அனுப்பினார். இதைத்தொடர்ந்து அவர்கள், தரைத்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரண் ராஜின் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், வீட்டின் தரை தளத்தில் தங்கியிருந்தவர்களின் வீட்டில் இருந்து 2 செல்போன்களையும் திருடிச் சென்றுவிட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரண் ராஜின் சார்பில் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முதற் கட்டமாக இவ்வழக்கு தொடர்பாக கொண்டித்தோப்பைச் சேர்ந்த சங்கர் என்ற ரப்பர் சங்கர், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய இரரண்டு தி.மு.க ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.