சீன விமானங்களை விட பாரதத்தின் தேஜஸ் போர் விமான சிறப்பானது என ‘பாரின் பாலிசி’ என்ற அமெரிக்க இதழ் அதன் கட்டுரையில் புகழாரம் சூட்டியுள்ளது. சீனர்கள் வழங்கத் தயாராக உள்ள எந்த விமானத்தை விடவும் தேஜஸ் சிறப்பு மிக்கது. தேஜஸில் உள்ள அமெரிக்க ஜி.இ என்ஜின், இஸ்ரேலிய ஏவியானிக்ஸ் அமைப்பு ஆகியவை அதன் திறனுக்கு சாட்சி. 40 வருடங்களாக அமெரிக்கா, ஐரோப்பிய போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் என்ஜின் கொண்ட தேஜஸ் விமானத்தை யாரும் சந்தேகிக்க போவதில்லை. ஆனால் ரஷ்ய என்ஜினை திருட்டுத்தனமாக காப்பி அடித்து உருவாக்கப்பட்ட சீன போர் விமானத்தை யாரும் எளிதில் விரும்பப் போவதுமில்லை என அக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.