காஷ்மீரில் 1990களில் ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களின் இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் ஹிந்து சமூக ஆர்வலரான சுஷில் பண்டிட். இவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக சுக்விந்தர் சிங், லக்கன் சிங் ஆகிய இருவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில், பஞ்சாப், பரித்கோட்டைச் சேர்ந்த இவர்களுக்கு, பண்டிட்டைக் கொல்வதற்கு தலா ரூ. 10 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. ஒப்பந்த கொலையாளிகளான இவர்களை பாகிஸ்தான், துபாயில் இருக்கும் சிலர் இயக்கி வந்துள்ளனர். இதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.