தி.மு.கவுக்கு ஹிந்து என்றால் அசிங்கம். ஹிந்து மதம் அசிங்கம், ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால், ஹிந்து ஓட்டு மட்டும் வேண்டும், வாட் இஸ் திஸ் பிரதர்? தி.மு.க, பா.ஜ.கவை ஹிந்திக் கட்சியாக சித்தரிக்கிறது. ஆனால் பா.ஜ.கவில் கர்நாடகாவை சேர்ந்த நான், தேசிய இளைஞரணி தலைவராகவும், தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் அகில பாரத மகளிரணித் தலைவியாகவும் உள்ளோம். தி.மு.க கட்சி நடத்துவதே ஒரு குடும்பத்துக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும்தான். சித்தர்கள், புலவர்கள், வாழ்ந்த நாடு இது. தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரான அரசியலை நடத்துகிறது. தேர்தல் நேரத்தில் சந்தர்ப்பவாதியாக மாறி, ஹிந்துவாக காட்டிக்கொள்கிறது என சேலத்தில் நடந்த பா.ஜ.க இளைஞரணி மாநாட்டில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தி.மு.கவை விளாசினார்.