ஜ.நா அமைதி படைக்கு இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பாரதம் பரிசளிக்கவுள்ளது. கோவிட்டுக்கு எதிரான போராட்டம் குறித்து ஐ.நா பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மெய்நிகர் விவாதத்தில் உரையாற்றும்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். உலகின் மருந்தகமான பாரதம், 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முக்கியமான மருந்துகள், நோயறிதல் கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பி.பி.இ கீட் ஆகியவற்றை வழங்கியுள்ளது. அதில், 80 நாடுகளுக்கு இவற்றை மானிய அடிப்படையில் வழங்கியுள்ளது என தெரிவித்த அவர், ‘மற்றவர்களின் நலனை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வேலையை செய்யுங்கள்’ என்ற பகவத் கீதையின் வாசகத்தை மேற்கோள் காட்டி பேசினார்