கனடாவின் மக்களும் எதிர்கட்சிகளும் கொரோனா தடுப்பில், அரசின் மெத்தனம் குறித்து அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்தனர். ஏன் பாரதத்திடம் உதவி கேட்கவில்லை என கேட்டனர். இந்நிலையில் ட்ரூடோ, பாரதப் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு தங்கள் நாட்டுக்கும் கொரோனா தடுப்பூசிகளை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பாரதத்தின் பங்கு குறித்தும் பாராட்டியுள்ளார். இரு தலைவர்களும், புவிசார் அரசியல் பிரச்சினைகள், காலநிலை மாற்றம், தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்தனர். பிரதமர் மோடி, கனடாவுக்கு பாரதம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.