75 வயதுக்கு மேற்பட்ட தேசிய ஓய்வூதிய பயனருக்கு வரி சலுகை: மத்திய அரசு பரிசீலனை

தற்போது வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்ட (என்பிஎஸ்) பயனாளர்களுக்கான வரிச்சலுகையில் பாகுபாடு நிலவுகிறது. இந்நிலையில்,பிஎஃப் பயனாளர்களுக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தை என்பிஎஸ் பயனாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தேசியஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும்மேம்பாட்டு ஆணையம் கோரிக்கை வைத்தது.

இதன் நீட்சியாக, என்பிஎஸ் திட்டத்தில் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வரிச்சலுகை கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகே, 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் அறிவிக்கப்படும். எனவே, வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். இந்தப் பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் இடம்பெறாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது