370ஆவது சட்டப் பிரிவை ரத்து – பகுஜன் சமாஜ், பிஜேடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் தீர்மானத்துக்கு பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம் (பிஜேடி), அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மற்ற கூட்டணிக் கட்சிகளான சிவசேனை, சிரோமணி அகாலி தளம், அúஸாம் கணபரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.மாநிலங்களவையில் அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தாக்கல் செய்து பேசினார்.

அவரைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா , மத்திய அரசின் தீர்மானத்தை பிஎஸ்பி ஆதரிக்கிறது. அந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களது கட்சியின் விருப்பமாகும்.

தீர்மானம் மற்றும் மசோதாவை ஆதரித்து சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத், இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைப் பாராட்டுகிறேன். இதன்மூலம் ஸயாமா பிரசாத் முகர்ஜியின் கனவு மட்டுமல்லாமல், பால் தாக்கரேவின் கனவும் நிறைவேறியுள்ளது. இதைக் கண்டு, சொர்க்கத்தில் இருக்கும் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பர்.

ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி, பல ஆண்டுகளாக நாட்டுக்கு 370ஆவது பிரிவு பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் துணிச்சலாக அதை முடிவுக்கு கொண்டு வரத் தீர்மானித்துள்ளார் என்றார்.

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், மத்திய அரசின் தீர்மானம் மற்றும் மசோதாவை ஆதரித்தார். இந்த மசோதாவை ஆதரிக்கிறோம்; 370ஆவது பிரிவு தற்காலிகமானதுதான். மசோதாவைக் கண்டு கவலைப்பட எதுவும் இல்லை. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் 370ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் என்றார்.