விடை தெரியாத வினாக்கள்
இன்று ஆகஸ்டு 18 இதே நாளில்தான் விமான விபத்தில் நேதாஜி பலியானார் என்ற செய்தி வெளியாகியது. ஆனால் இந்த விமான விபத்தில்தான் காலமானார் என்பது உறுதி செய்யப்படவில்லை. நேதாஜி விமான விபத்தில் இறந்தாரா? இல்லையா? என்ற சர்ச்சை இன்றும் தொடர்கின்றது. நேதாஜியைக் கண்டால் அவரை உடனடியாகக் கைது செய்து யுத்தக் குற்றவாளியாக்கி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக காந்திஜியும், நேருவும் பிரிட்டீஷாரிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர் இந்தியாவிற்குள் வரவில்லை. ஆனால் எனக்கு அவர் இருக்குமிடம் தெரியும் என்று முன்பு முத்துராமலிங்க தேவர் தொடர்ந்து கூறிவந்தார். அன்னைத் திருநாட்டின் அடிமை நிலைமையைக் கண்டு ஆர்த்தெழுந்த நேதாஜி தான் பெற்ற ஜ.சி.எஸ் பட்டத்தைத் தூக்கி ஆங்கிலேயரின் முகத்தில் எறிந்து விட்டு விடுதலைப் போரில் குதித்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரானார். காந்திஜி உட்பட அவரது சகாக்களுக்கு நேதாஜியின் தீவிரவாதம் பிடிக்கவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகினார். சுதந்திர பாரதத்தில் நேதாஜி மட்டும் இருந்திருந்தால் பாரதத்தின் இன்றைய சரித்திரமே மாறி அமைந்திருக்கும்.
பிறந்த குழந்தை கூட ‘அழுகை’
எனும் புரட்சி செய்துதான்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
இன்று நேதாஜி நினைவு நாள்
இதுதான் சகிப்புத்தன்மையா
பஹ்ரெய்னில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ஹிந்து தெய்வங்களின் சிலைகளை அங்கு வந்த சில பெண்கள் உடைத்தனர். அது மட்டும் இல்லாமல் அந்த கடைக்காரரையும் அநாகரீகமாக திட்டியுள்ளனர். சகிப்புதன்மையற்ற இந்த காட்டுமிராண்டி செயலுக்கு பாரதத்தில் கண்டனங்கள் வலுத்துள்ளன. முன்னாள் எம்.பி தருண் விஜய்யும் இதற்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 54 வயதான பெண் ஒருவர் இது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என அந்த நாட்டு உள்துறை இதற்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமீர்கானின் தேசப்பற்று
சமீபத்தில் துருக்கிக்கு படப் பிடிப்பு சம்பந்தமாக அமீர்கான் சென்றுள்ளார். அங்கு அவர் துருக்கி அதிபரின் மனைவியை சந்தித்து பேசியுள்ளார். சமீப காலமாக துருக்கி நம் தேசத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிராக விமரிசனம் தெரிவித்திருந்தது துருக்கி. இங்குள்ள முஸ்லிம்களை இலவச சுற்றுலா எனும் பெயரில் அழைத்து சென்று நம் தேசத்திற்கெதிராக திருப்பி விடுகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ’யின் சொர்கபூமியாகவும் துருக்கி திகழ்கிறது. காங்கிரஸ் கட்சியும் 2019–ல் தன் வெளிநாட்டு அலுவலகத்தை அங்கு திறந்தது. இவற்றை அறிந்திருந்தும் அவரின் இந்த சந்திப்பு அவரின் தேசபக்தியின் அளவையே காட்டுகிறது. சில காலம் முன்பு பாரதத்தில் சகிப்புதன்மை இல்லை என பொய் சொல்லி தன் மத விஸ்வாசத்தை காட்டியவர்தான் இந்த அமீர்கான்.
காங்கிரஸ்தலைவரின்ஞானதோயம்