ஹோமி ஜகாங்கீர் பாபா

பாரதம் தனது முதல் அணுகுண்டுச் சோதனையை 1970 -ல் பொக்ரானில் வெற்றிகரமாக நிகழ்த்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.

அமெரிக்க, ரஷ்யா வரிசையில் உலகில் ஆறாவது அணு ஆயுத வல்லமை பொருந்திய நாடாக பாரதம் அன்று உருவெடுத்தது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது பல்துறைகளில் மேம்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவின் இன்றைய அணு ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சி ஆச்சரியமானது.

இன்று பாரத்திலேயே தயாரிக்கப்படும் ஏவுகணை துவங்கி செவ்வாய் கிரகப் பயணம் என நம் வல்லரசுப் பயணத்தின் அஸ்திவாரமாக இருந்தவர் விஞ்ஞானி ஹோமி ஜகாங்கீர் பாபா.
யாரைப் பற்றியும் புகழும் பழக்கமில்லாத சர் சி.வி. ராமன் ஹோமியை ‘இந்தியாவின் டாவின்சி‘ என வர்ணித்தார். அதற்குக் காரணம் வழக்கமான விஞ்ஞானிகள் போலல்லாது இவர் ஓவியம், கட்டடக்கலை, இசை என கலைகளின் மீது பேராவல் கொண்டிருந்தார். 1962களில் இந்தோ-சீனா போரின் போது அணுகுண்டு ஆய்வு தீவிரமடைந்தது.

1964 ல் சீனா அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்த்திய போது அரசு அனுமதித்தால் பாரதமும் அதே போல சோதனையை நிகழ்த்திக் காட்ட முடியும் எனச் சவால் விட்டார் ஹோமி. ஆனால் அவர் கனவு நிறைவேறும் முன்பே 1966-ல் வியன்னாவில் நடந்த சர்வதேச அணுசக்திக் கழக முகமைக்குச் செல்லும் வழியில் ஆல்பஸ் மலைத்தொடரில் வீழ்ந்து அவர் விமானம் விபத்துக்குள்ளானது. நேதாஜி, லால் பகதூர் சாஸ்திரி வரிசையில் ஹோமி பாபாவின் மர்மமான மரணம் பற்றிய பல்வேறு சர்ச்சைகளுடன் இன்னமும் தீர்க்கப்படவில்லை.

ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்த தினம் இன்று.