ஹிந்து மத கடவுளின் படங்களை எரித்த கிருஸ்துவ மதபோதகர் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருபட்டியில் ஐந்து ஆண்டுகளாக பெந்தேகோஸ்தே திருச்சபை இயங்கி வருகிறது. இங்கு மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ(53) மதபோதகராக உள்ளார். கடந்த 2ல் திருச்சபை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் ஹிந்து கடவுளின் படங்களை எரித்துள்ளார். இது தொடர்பான ‘வீடியோ’ மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது.

இதை அறிந்த  எஸ்.குருபட்டி பகுதி ஹிந்து அமைப்பின் பொறுப்பாளர், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று புகார் செய்தார். இதையடுத்து பிற மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மத போதகர் ஜான் பிரிட்டோவை கைது செய்தனர்.