ஹிந்து மக்களுக்கு என்ன ஆனது?

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளர் மிலிந்த் பராண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணிப்பூர் மாநிலத்தின் ஹ்மர் மாணவர் சங்கம் 22 மே 2023 அன்று திபைமுக் 100 சதவீத கிறித்தவர் என்று பொய்யாகக் கூறி ஒரு தவறான நோக்கத்துடன் பத்திரிகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி கிறிஸ்தவ மக்கள் தொகை 94.73 சதவீதம். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை. இப்போது ஹிந்துக்கள் இங்கு இல்லை என்று கூறினால், ஹிந்து மக்களுக்கு என்ன ஆனது? இப்போது ஹிந்து மக்கள் இல்லாத அளவுக்கு ஹிந்துக்களுக்கு ஏதாவது மோசமான விஷயங்கள் நடந்திருக்கிறதா?  எங்கள் தகவல்களின்படி, மணிப்பூரில் உள்ள 8 மாவட்டங்களில், குறைந்தபட்சம் 1,693 தீவைப்பு மற்றும் மெய்தி, ஹிந்துக்களின் வீடுகள், கோயில்கள் உள்ளிட்ட மதக் கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. மேலும் இதுகுறித்த அறிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதால் புள்ளிவிவரங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும், நாங்கள் இதனுடன் சர்தார் மலை மாவட்டத்தில் உள்ள கோப்ரு லைக்கா சிவன் கோயில் குறித்த ஒரு சிறிய வீடியோவை இந்த அறிக்கையுடன் இணைத்துள்ளோம். குகி போராளிகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட மெய்தே சமூகத்தினருக்கு இக்கோயில் மிகவும் முக்கியமான மதக் கட்டமைப்பாகும். மணிப்பூரின் ஹ்மர் மாணவர்கள் சங்கம் போன்ற அமைப்புகளால் கட்டமைக்கப்பட்ட தவறான, போலியான, பக்கச்சார்பான விவரிப்புகள் குறித்து மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மெய்தி சமூகத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருள் மாஃபியா, பணம் மற்றும் ஆயுதங்களின் ஈடுபாடுகளும் மிகவும் கவலைக்குரியது. மியான்மரில் இருந்து சின் குக்கிகள் ஊடுருவுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.