ஹிந்து கோயில் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான மற்றொரு நாசவேலை சம்பவம் அரங்கேறியுள்ளது. கராச்சியில் உள்ள கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா கோயிலும் அனுமன் சிலையும் அவமதிக்கப்பட்டு, கோயிலின் பூசாரியும் தாக்கப்பட்டார். இந்த கோயில் கோரங்கி காவல் நிலையத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் ஒருபகுதியில் அனுமானுக்கான தனி சன்னதி கட்டப்பட்டு வந்தது. இதனால், கோயிலுக்குப் பக்கத்தில் வசிக்கும் பூஜாரி, தனது வீட்டில் சிலைகளை பாதுகாத்து வந்தார். கடந்த 8ம் தேதி இருசக்கர வாகனங்களில் வந்த எட்டு பேர் கோயிலை தாக்கியதுடன் சிலைகளையும் நாசப்படுத்தினர். பூஜாரியையும் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை இதுவரை அடையாளம் காணவில்லை யாரையும் கைது செய்யவும் இல்லை.