ஹிந்து கோயில் மீது தாக்குதல்

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கோயில் மீது மற்றொரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. வங்கதேசத்தின் ஜெனைடா மாவட்டத்தில் உள்ள தௌடியா கிராமத்தில் உள்ள காளி கோயில் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை, அங்குள்ள முஸ்லிம் மதவெறியர்களால் தாக்கப்பட்டது. கோயிலில் உள்ள காளிதேவி சிலை துண்டு துண்டாக வெட்டிய அவர்கள், சிலையின் தலைப் பகுதியை கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் கொண்டு சென்று போட்டனர்.  10 நாட்கள் நீடித்த துர்கா பூஜை திருவிழா முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த மதவெறி சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்கதேசத்தில் ஹிந்துக் கோயில்கள் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜூலை 16ல், ஒரு பயங்கர முஸ்லீம் கும்பல் ஒன்று நரைலின் லோஹகராவின் சஹாபரா பகுதியில் ஒரு கோயில், ஒரு மளிகைக் கடை மற்றும் பல ஹிந்துக்கள் வீடுகளை சேதப்படுத்தியது. ஆகஸ்ட் மாதம், மோங்லா உபாசிலாவில் உள்ள கைன்மாரி கோயிலில் உள்ள ஹிந்து தெய்வங்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. செப்டம்பரில் துர்கா பூஜைக்கு முன்னதாக, பாரிசாலில் உள்ள மெஹெந்திகஞ்ச் உபாசிலாவில் உள்ள காஷிபூர் சர்பஜனின் துர்கா கோயிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்தனர். கடந்த 2021ம் ஆண்டிலும் துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது அங்குள்ள மதவெறியர்கள் ஹிந்து கோயிலையும் ஹிந்துக்களையும் கொடூரமாக தாக்கினர். அப்போது, சந்த்பூரின் ஹாஜிகஞ்ச், சட்டோகிராமின் பன்ஷ்காலி, சப்பைனவாப்கஞ்ச் ஷிப்கஞ்ச் மற்றும் காக்ஸ் பஜாரின் பெகுவா ஆகிய இடங்களில் உள்ள ஹிந்து கோயில்கள் தாக்கப்பட்டன. ஆறு பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.a