ஹிந்துகளே புரிந்துகொள்வோம் நமது ஆட்சியாளர்களை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் தலா  2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. பொங்கலை தமிழர் பண்டிகை என்று ஒட்டுமொத்தமாக கூறினாலும் எந்த ஒரு முஸ்லிமோ, கிறிஷ்துவர்களோ இயற்கை கடவுளான  சூரியனையும் விவசாயத்துக்கு உதவும் மாடுகளையும் வணங்கப்போவதில்லை. அப்படி இருக்கையில் அரசு வழங்கும் இந்த பொங்கல் பரிசு எப்படி இந்த மாற்று மதத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது புரியவில்லை. கூட்டத்தோடு கோஷம் போடுவது போல எல்லோருக்கும் கொடுத்தாலும் அதனை துவக்கி வைக்கும் முதல்வர் ஒரு முஸ்லீம் பெண்மணியிடம் முதலில் கொடுத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் குறிப்பாக அதனை சிரத்தையாக கொண்டாடும் இந்துக்களை அவமானப்படுத்தியிருக்கிறார் என்பது தான் உண்மை.

தமிழக அரசும் தமிழக கட்சிகளும் வழங்கும்  நல உதவி திட்டங்களும் ரம்ஜான் பண்டிகை  நல உதவி முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவி கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்த ஹிந்துக்கள் மட்டுமே கொண்டாடும் பொங்கல் பண்டிகைகைக்கு மட்டும் எல்லோரையும் இணைப்பது எதற்காக? அரசால் வழங்கப்படும் சலுகைகளில் ரம்ஜானுக்காக ரேஷன் கடைகளில் நொய்யரிசி பல மெட்ரிக் டன் அளவுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதனை எந்த இந்துவும் பள்ளிவாசல்களில் போய் வாங்கி சாப்பிடுவதில்லை. முழுக்க முழுக்க முஸ்லிம்கள் மட்டுமே பயனடைகிறார்கள் . அதுபோல இலவச அரிசி எதுவும் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் கூல் ஊற்றும் நிகழ்வுக்கு வழங்கப்படுவதில்லை. அரசின் சார்பில் உலோமாக்களுக்கு நிதியுதவியாக மதம் தோறும் 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் சுமார் ஒருலட்சத்துக்கும் மேலான இமாம்கள் பயனடைகின்றனர். இந்த பணம் அவ்வளவும் அரசின் கஜானாவில் இருந்தே வழங்கப்படுகிறது .

 

தமிழக அரசின் சார்பில் நலிவடைந்த கிராம கோயில் பூஜாரிகளுக்கு 2000 பேருக்கு வழங்கப்படுகின்ற  பென்சன் தொகை எவ்வளவு தெரியுமா 2000 ரூபாய் அதையும் அறநிலையத்துறையின் மூலமே வழங்குகிறது. ஆனால் பத்துபைசா வருமானத்தை கூட அரசாங்கம் பெறாத வர்க்கப் போர்டின்  முஸ்லீம் உலமாக்களுக்கு  15000 ரூபாயை அரசின் கஜானாவில் இருந்து தான் வழங்குகிறது. அரசின் சார்பில் ஆலயங்களில் அன்னதானம் நடக்கிறதே என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடாதீர்கள். அந்த அன்னதான திட்டத்திற்கு பணம் அறநிலையத்துறை கூட கொடுப்பதில்லை. அதற்கு தனியாக பக்தர்களிடமிருந்து வசூல் செய்து நடத்தப்படுகிறது. அதற்கு அரசு தனது கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட செலவழிப்பதில்லை .மேலும் அரசின் சார்பில்  நாகூரில் உள்ள தர்காவுக்கு சந்தன உரூஸ் திருவிழாவுக்கு இலவசமாக சந்தன கட்டைகள்  வழங்கப்படுகிறது இந்த இலவச சந்தன கட்டைகள் எங்காவது ஹிந்து கோயில்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறதா?

மேலும் ஹஜ்பயணத்திற்கு அரசு கொடுக்கும் மானியங்களை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் மாநில அரசுகள் இந்த மானியத்தை  தொடர்ந்து வழங்கி வருகிறதே அதர்க்குரிய பணத்தை வக்கப் போர்டு கொடுக்கிறதா  இல்லையே அரசின் கஜானாவில் இருந்துதானே கொடுக்கிறீர்கள். மேலும் பழுதடைந்த தேவாலயங்களை சரிசெய்ய ஒரு கோடி ரூபாய் அரசின் சார்பில் நிதியுதவி  வழங்கப்படுகிறது. அந்த நிதி எந்த சர்ச் பணத்திலும் இருந்து கொடுக்கப்படவில்லை முழுக்க முழுக்க அந்த நிதி அரசின் கஜானாவில் இருந்தே கொடுக்கப்படுகிறது. அரசின் கஜானா பணம் என்பது ஹிந்துக்களின் பணமும் கூட . ஹிந்துக்களிடம் வரி வசூல் செய்து பெறப்படும் பணத்தில் முஸ்லிம்களுக்கு உதவி கிறிஸ்தவர்களுக்கு தாராளமாக  உதவி  அப்பாவி ஹிந்துக்களுக்கு மட்டும்  பட்டை நாமம்  இதுதான் மதச்சார்பின்மையா?
மேலும் இந்துக்களுக்கு கைலாயம் சென்று வர நிதியுதவியை அறநிலையத்துறையின் சார்பில் வழங்கும் அரசு கிறிஸ்தவர்களின் ஜெருசலம் பயண தொகையை அரசின் கஜானாவில் இருந்து செலுத்துகிறது சர்ச் மசூதியில் இருந்து ஒரு பைசாவை கூட பெறாத இந்த அரசு அவர்களுக்கு அரசின் கஜானாவை திறந்து விட்டுள்ளது ஆனால் ஹிந்து ஆலயங்கள் மூலம்  பெறப்படும் கோடி கோடியான வருமானத்தை   அரசின் கஜானாவுக்கு பல்வேறு வழிகளில் மடைமாற்றம் செய்து வருகிறது. இந்த விஷயத்தில் தரலாம் காட்டுவதில்லை பெரும்பான்மையினருக்கு ஆல்வா கொடுக்கும் அரசுகள் சிறுபான்மையினரை கொண்டாடி வருகிறது . கொரோனா தொற்று காலத்தில் கூட ஹிந்துக்களின் விநாயகர் சதுர்த்தி, சூரசம்காரம் வைகுண்ட ஏகாதசி  பண்டிகைகளுக்கு தடைவிதிக்கும் அரசு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட தேவாலயங்களில் கூட்டம் சேர்க்க அனுமதியளிக்கிறது. அதுபோல் ரம்ஜான் பக்ரீத் தொழுகை  நிகழ்ச்சிகளில் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியதை அரசு கண்டு கொள்ள  வில்லை மறக்க ஹிந்துக்களில் விழாக்களில் கோயிலுக்கே சென்று கதவை ஆடை என்று மிரட்டி வரந்தத்து காவல் துறை  அரசின் விதிமுறைகளும் சட்டமும் நீதியும் ஹிந்துக்களுக்குக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறது . என்று மாறும் இந்த அலட்சிய அவலநிலை?

ஹிந்துக்கள் என்றுமே ஒட்டுமொத்தமாக தங்களின் உணர்வுகளை மதிக்காத வேண்டுமென்றே புண்படுத்துகின்ற ஹிந்து என்ற வார்த்தையை கேட்டாலே வெறுப்பு வருகிறது என்பது போன்ற வார்த்தைகளை சொல்லுகின்ற நபர்களின் கட்சிக்கு எல்லாவற்றையும் மறந்து வாக்களிக்கிறோம் . ஆனால்  சிறுபான்மையினர் தங்களை சீண்டுவோர்களுக்கு வாக்களிப்பதில்லை மேலும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து வாக்களித்து பாடம் புகட்டுகிறார்கள் அதனாலேயே எந்த அரசியல் கட்சியும் அவர்களின் கோரிக்கை எதுவானாலும் அதில் நீதி, நியாயம் இருக்கிறதா என்று கூட பார்ப்பதில்லை உடனே ஆதரவளிக்கிறார்கள் இந்த அரசியவாதிகளை கட்டிற்குள் கொண்டுவரும் ஒரு  ஓட்டு மட்டுமே . பெரும்பான்மை ஹிந்துக்கள் ஓட்டுமொத்தமாக வாக்களிக்க முனையும் போது இந்த அரசியல்வாதிகள் கண்டிப்பாக ஹிந்துக்களின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிப்பார்கள் இல்ல்லையேல் நீங்கள் எவ்வளவு  கத்தினாலும் எப்போதும் போலவே கண்டும் கானாமல்  போய்விடுவார்கள்.