‘ஸ்ரீ ராமானுஜர் 1000’ தரும் நல்ல விளைவு சமுதாய நல்லிணக்கப் பயணத்தின் வீறுநடை

‘புதுச்சேரி: ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஜெயந்தி விழா குழு சார்பில் டிசம்பர் 2 அன்று பல சமுதாய தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் பிக்கு ராம்ஜி இதாதே, புதுச்சேரி மாநில விழாக் குழுத் தலைவர் நீதியரசர் ஸ்ரீ ராமபத்ரன், தென்னிந்திய ஆர்.எஸ்.எஸ் சங்கசாலக் ஆர்.வன்னியராஜன் முதலியோர் ஸ்ரீராமானுஜரும் அம்பேத்காரும் சமுதாயத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டது பற்றி சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் 24 சமூகங்களைச் சேர்ந்த 62 பேர் கலந்து கொண்டனர்.

ஹிந்து மதத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது”

– பிக்கு இதாதே (ஆதி திராவிடர் தேசிய ஆணைய தலைவர்)

 

விழுப்புரம்: சமுதாய நல்லிணக்கப் பேரவை சார்பில் டிசம்பர் 7 அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் 125ம் ஆண்டு விழா கருத்தரங்கில் ஒடுக்கப்பட்டோர், ஆதி திராவிட- பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் பிக்கு ராம்ஜி இதாதே சிறப்புரையாற்றினார். அவர், ஹிந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் என்பது கிடையாது. அனைவரும் சமமே. ஹரியின் ஜனங்கள் தான் ஹரிஜனங்கள். அவர்களில் பலர் ராமாயணம், மகாபாரதம் போன்றவைகளை எழுதியிருக்கிறார்கள். அத்துடன் தங்களது வாழ்க்கையில் அதனை கடைபிடித்தும் வருகிறார்கள். அம்பேத்கர் ஒரு சிறந்த சட்ட சிறந்த மாமனிதராகவும் திகழ்ந்தார்.

அவரது குடும்பத்தினர் ஆன்மிக பாரம்பரியத்தில் வளர்ந்தவர்கள். இருப்பினும் அவர் சாதிக்கொடுமையை அனுபவித்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர்களது மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டவர். அதற்காகவே 1924ல் அமைப்பை ஏற்படுத்தி, தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்ல மூன்று விதமான பத்திரிகைகளை நடத்தினார். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்றும் கூறினார். சமூக நீதிக்காக போராடிய அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை நாம் அவசியம் படிக்க வேண்டும்” என்று கூறினார்.
இக்கருத்தரங்கிற்கு விழுப்புரத்தின் மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இ.எஸ். கல்விக் குழுமத்தின் தாளாளர் இ.சாமிக்கண்ணு நாட்டார் குத்துவிளக்கேற்ற, இப்பேரவையின் மாவட்ட அமைப்பாளரும், எஸ்.சி.,எஸ்.டி. கூட்டமைப்பின் நிறுவனருமான ஆடிட்டர் எஸ்.தனசேகரன் வரவேற்புரை ஆற்ற, தொடர்ந்து வழக்கறிஞர் எஸ்.சந்திரமௌலி, திருக்குறள் பேரவையின் நிறுவனர் சி.கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இக்கருத்தரங்கில் மதியம் நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ப.கனகசபாபதி, தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் டாக்டர் எஸ்.பி.சரவணன், பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி உதவி இயக்குநர் பேராசிரியர் சா.ரவிவர்மன், சமூக நல்லிணக்கப் பேரவை தென் தமிழக அமைப்பாளர் பி.தங்கராஜ், குரு.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள். மாலையில் சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அகில பாரத அமைப்பாளர் ஷ்யாமா பிரசாத், மதுரை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஆர்.வன்னியராஜன் ஆகியோர் நிறைவுரையாற்றினார்கள். இக்கருத்தரங்கில் சுமார் 200 பேர் பங்கேற்றனர்.