வெள்ளை மாளிகையில், தீபாவளி கொண்டாடிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்

இந்தியா முழுவதும் நாளை(அக்.,27) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில்அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்க அதிகாரிகளுடன் அதிபர் டிரம்ப் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்
தீபாவளி பண்டிகை தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கை: அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்துகிறது. நமது அரசியல் சாசனத்தில் கூறியுள்ள உரிமைகளை எனது நிர்வாகம் பாதுகாக்கும். இதன் மூலம் எல்லா மத நம்பிக்கை கொண்ட மக்களும், தங்கள் நம்பிக்கையின்படியும் வழிபாட்டு முறைகளின்படியும் வழிபட முடியும்.
தீபாவளி கொண்டாடுகிறவர்களுக்கு, அந்த கொண்டாட்டம், மகிழ்ச்சிகரமானதாகவும், ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் அமைய நானும், மெலனியாவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் ஹிந்துக்கள், ஜெயின்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினருக்கு, இந்த காலம், இருளை, வெளிச்சமும், தீமையை நன்மையும், அறியாமையை, ஞானமும் வெற்றி பெறும் நேரம் புனிதமான நேரம் ஆகும்.