வெளிநாட்டு சதி முயற்சி தடுப்பு

வெளிநாட்டு நிதிப்பரிமாற்றச் சட்ட விதி (FCRA) விதிகளை மீறி செயல்பட்டதால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,800 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மோடி அரசு ரத்து செய்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு, வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று வந்த 14,800 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை FCRA விதிகளை மீறி செயல்பட்டதால் ரத்து செய்தது. பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் அளித்த பதிலில் FCRA விதிகளை  மீறி செயல்பட்டதால் தொண்டு  நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 2015 – 16 தொடங்கி 2017 – 18  வரை ரூ. 50,000 கோடிகள் வெளிநாட்டிலிருந்து தொண்டுநிறுவனங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. இதில் 2015 – 2016 ல் 17.803.21 கோடியும் 2016 – 2017 ல் 15,343.15 கோடியும் 2017 / 2018 ல் 16,894.37. கோடியும் பெறப்பட்டுள்ளது. FCRA விதிகளை மீறிய 13,000 தொண்டு நிறுவனங்களை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்று கடந்த ஆண்டு ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரன் ரீஜ்ஜூ தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விதிகளை மீறி செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அண்மையில் FCRA விதிகளை மீறியதற்காக உச்சநீதிமன்ற வக்கீல் இந்திரா ஜெய்சிங் மீது CBI வழக்கு பதிவு செய்தது.