வீராங்கனைகளின் வரலாறு

ஹிந்து மகளிரை ஒருங்கிணைக்கும் ராஷ்ட்ர சேவிகா சமிதி 1936 அக்டோபரில் அவதரித்தது. இன்று நாடு நெடுக நடைபெறும் அந்த அமைப்பின்  2,700 கிளைகள் மூலம் 475க்கும் அதிகமான தொண்டுப் பணிகள் செய்து வருகிறார்கள் சேவிகைகள். சமூகப் பிரச்சினைகளையும் அதிரடியாக எதிர்கொள்கிறது சமிதி. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் சேவிகைகள் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கையுறைகள், சுகாதார உபகரணத் தொகுப்புகள், நாலரை லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள் இவற்றை விநியோகித்தார்கள். 18 நாடுகளிலும் சமிதியின் நற்பணி நடைபெறுகிறது.