வீடு தந்த வீராங்கனைகள் நாடு காத்திட எல்லையிலே

மயமலை அடிவாரத்தில் பாரதத்திற்கும் சீனாவிற்கும் நடுவில் 3488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லை பாதுகாக்கப்பட வேண்டி உள்ளது. இனி இந்த எல்லையை பாதுகாக்கப் போகிறவர்கள் 21, 22 வயதினரான இளம் வீராங்கனைகள். ஐகூஆக எனப்படும் இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ் படைப்பிரிவில் அண்மையில் பயிற்சி முடிந்து சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இவர்கள். 44 வார கடுமையான பயிற்சிக்குப் பிறகு இந்த 500 வீராங்கனைகளும் 8,000 முதல் 14,000 அடி உயரம் உள்ள பனி முகடுகளில் நின்றபடி பாரத தேசத்தை காவல் புரிவார்கள்.VEERANGANAI

இந்த கமாண்டோக்களுக்கெல்லாம் எல்லையற்ற மகிழ்ச்சி. தேசத்தை காக்கப்போகிறோம் என்ற தெம்பு. பனி, குளிர்? கவலையே இல்லை. தேசம் காக்கும் கடமையின் முன்னே இமய பனி எம்மாத்திரம்?” என்கிறார் 12வது வகுப்பு முடித்ததும் படையில் சேர்ந்துள்ள தீபிகா. படையில் சேர அழைப்பு கடிதம் வந்ததும் தாதா, பாட்டியை வணங்கிவிட்டு பெற்றோரின் முகங்களில் மகிழ்ச்சியை தவழவிட்டு, வீட்டை விட்டு புறப்பட்டார். என் அக்கா பட்டாளத்துக்காரி ஆகிவிட்டாள் என்று இவரது உடன் பிறப்புகள் ஊர்முழுவதும் தண்டோரா போட்டுவிட்டார்கள். அவ்வளவு பெருமிதம். தீபிகாவைப் போலத்தான் அந்த 500 பேரின் பெற்றோரும் சாமானியமான குடும்பத்தினர். பஞ்சாபில் கடை வியாபாரியான ஒரு அன்பரின் மகள் அமர் தீப். இவருக்கு சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர ஆசை. குடும்பத்தில் வேறு யாரும் ராணுவத்தினர் இல்லை.

பாரத மாதாவின் இந்த வீர புத்திரிகள் எல்லை காவல் பணியில் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே எதிரி நடுங்குவான். அப்படி ஒரு உணர்ச்சிப் பிழம்பாகக் காணப்பட்டார் ரேணு. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஹரியான மாநிலம் பஞ்சகுலா பகுதியில் கமாண்டோ பயிற்சி முடித்த கையோடு ரேணு கூறினார், வாலாட்ட நினைக்கும் எதிரியை முதலில் எச்சரிப்போம். பிறகு தடுப்போம். நான் ராணுவத்தில் சேர்ந்தது என் தம்பி ஹிதேந்திராவுக்கு மிகவும் மகிழ்ச்சி.” ராணுவ உடுப்பு அணிந்ததும் ரேணுவுக்கு எப்படி இருந்ததாம்? எனக்கு எப்போதுமே கம்பீரமாக வளையவந்து பழக்கம். கம்பீரமாகவே இருப்பேன். கம்பீரமாகவே மடிவேன்” என்று உணர்ச்சிப் பிழம்பாகக் கூறினார்.

மத்திய பிரதேச வீராங்கனை அனுஸ்ரீ மிக எளிமையாக தோற்றம் அளித்தார். மிக ஆபத்தான கமாண்டோ பயிற்சி முடித்த பட்டாளத்துக்காரி என்பதை பார்ப்பவர் எவரும் நம்பவே மாட்டார்கள். ஆனால் அதிநவீன ஆயுதங்கள் அனைத்தையும் அனாயாசமாக கையாள்வதில் கில்லாடி இவர் என்பதுதான் விஷயம்.

பனிமலையில் பாதுகாப்புப் பணிக்குப் போகிற கமாண்டோக்களுக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் சுவாசித்து பணிபுரியும் பயிற்சியும் தரப்படுகிறது. அதைவிட முக்கியமான பயிற்சி, என்ன கஷ்டம் வந்தாலும் தேசத்திற்காக அதை எதிர்கொண்டு முறியடிப்பது எப்படி என்பதுதான்.

‘வீரம், மனோதிடம், கடமையில் உறுதி’ என்பதுதான் ஐகூஆக படைப்பிரிவின் லட்சிய வாசகம். போர்முனைப்பணி உள்பட எல்லா ராணுவ நடவடிக்கைகளிலும் பெண்களை நியமிக்கும் முதல் தேசம் உலகத்திலேயே பாரதம் என்ற பெருமையை தேடித்தந்துள்ள இந்த ஐகூஆக கமாண்டோக்கள் சாதிப்பார்கள், வெற்றிபெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.