வி.ஹெச்.பி பண்பு பயிற்சி முகாம்

விஷ்வ ஹிந்து பரிஷத்  வடதமிழகம் சார்பில் பெண்கள் பங்கேற்கும் மாத்ருசக்தி துர்காவாகினி பண்பு பயிற்சி முகாம், வேலூரில் உள்ள ஸ்ரீபுரத்தில்  அம்மாவின் ஆசிகளோடு  சிறப்பாக துவங்கியது. வடதமிழகத்தின் 21 மாவட்டத்தில் இருந்து 120 பெண்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றனர். துவக்க நிகழ்ச்சியில் வி.ஹெச்.பி அகில பாரத இணைப் பொதுச்செயலாளர் கோ ஸ்தாணுமாலயன், அகில பாரத மாத்ருசக்தி அமைப்பாளர் மீனாட்சிதாய், சுவாமினி கயிலை சின்மய சிவபியாம்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீபுரம் தவத்திரு சக்திஅம்மா அனைவரையும் சந்தித்து ஆசிகள் வழங்கினார். பி.எம் நாகராஜன், முகாமில் ஸ்ரீ ராமஜென்ம பூமி வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தார்.