விவசாய ஸ்டார்ட்டப்

விவசாய ஸ்டார்ட்டப் நிறுவனமான டார்ட்டன் சென்ஸ் நிறுவனம்களை எடுக்கும் ரோபோவை அறிமுகம் செய்துள்ளனர்.

களைகளால் 32% பயிரிழப்பு ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. களைகள் எடுக்க ஆட்கள் பற்றாகுறையும் நிலவுகிறது. இதை சரி செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பிரிஜ்பாட் என்ற இந்த ரோபோ.

காமிரா வழியாக களைகளை மட்டுமே கண்டறிந்து அவற்றை அழிக்க மருந்து தெளிக்கிறது இந்த ரோபோ. இதனால் களைக்கொல்லி மருந்துகள் 70% குறைவாக செலவாகின்றன. மண் வளம் குறித்த தகவல்கலையும் இந்த ரோபோ சேகரிக்கிறது.

ஒரு ஏக்கரில் களை எடுக்க ஒரு மணி நேரமே ஆகும். இதற்கான செலவு ரூ. 1500. எதிர்காலத்தில் விதைத்தல் அறுவடைக்கும் ரோபோ தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.