கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற குளிர்கால சட்டமன்றக் கூட்டுத் தொடரில், கர்நாடக அரசு மதம், சாதி, மொழி, இனம் அடிப்படையில் வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்கும் வகையில், ‘’வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா 2025’’ ஐ, சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத்திற்கு, ஆதரவாக தெலுங்கானா முதல்வரும், இம்மாதிரியான மசோதாவை தனது மாநிலத்தில் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா முழுக்க முழுக்க ஹிந்துக்களுக்கு எதிரானது என்பது வெட்ட வெளிச்சமாகும். 2021 முதல் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை தொடங்கி, வக்ஃப் வாரிய சொத்து ஆக்கிரமிப்பு வரையில் நடந்த வன்முறையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட, எந்த எதிர்ப்பும் ஏற்படக்கூடாது என்ற சிந்தனையில், ஆளும் காங்கிரஸ் அரசு இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தின் படி, சாதி அமைப்பில் ஒருவன் பேசினாலும், அந்த அமைப்புக்கு தடைவிதிக்க சட்டம் வழி வகை செய்கிறது. இந்தச் சட்டம் அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமையான பேச்சு சுதந்திரத்திற்கு கடிவாளம் போடுகிறது. இச்சட்டத்தின் மூலம் அரசுக்கு எதிரான கருத்துகளை தடுக்கும் வகையில், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படும்.
ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களைப் பற்றி பேசினாலும் இந்த மசோதாவின் மூலம் கைது செய்யப்படலாம் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம்.
இந்த மசோதா குறிப்பாக எதிர்க்கட்சியினரையும், ஹிந்து அமைப்புகளையும் குறிவைக்க, ஆளும் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு ‘பிரம்மாஸ்திரம்’ என்றும், ஹிந்து மதக் கோட்பாடுகள் அல்லது இதிகாசங்கள் குறித்துப் பேசுவது வெறுப்புப் பேச்சு என்ற பெயரில் முடக்கப்படலாம் என்றும், இது ஹிந்துக்களின் மத உரிமைககளை வெகுவாக பாதிக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இந்த மசோதா சிறுபான்மையினரை திருப்திபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி, கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை கிடையாது என்ற விதி இருப்பதால், அரசியல் உள்நோக்கத்துடன் யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க வழி வகுக்கும். இந்த மசோதா, ஹிந்துக்களைப் பிரித்து வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
சிறுபான்மையினருடன், பட்டியல் சமூக மக்கள் மற்றும் பழங்குடி மக்களை இணைத்து, ஹிந்து சமுதாயத்தில் பிளவை உருவாக்குகிறது. இவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்பதை மறைத்து, ஹிந்துக்களிடையே ஒரு வேறுபாட்டை உருவாக்கி, மோத விடுகிறது. இந்த ஷரத்து, தற்போது கா்நாடக அரசு கொண்டு வந்துள்ள மசோதவிலும் உள்ளது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வெறுப்புப் பேச்சு எதிர்ப்புச் சட்டத்தை பின்பற்றி, தெலுங்கானாவிலும் “வெறுப்புப் பேச்சு தடுப்பு மசோதா” (Anti-Hate Speech Bill) கொண்டு வரப்படும் என்று 2025 டிசம்பர் 20 அன்று அறிவித்துள்ளார்.