வித்யாபாரதி ஆர்வம்: படிப்பில் பூரணத்துவம்

 

‘ஒருங்கிணைந்த கல்வியின் கூறுகள்’ என்ற தலைப்பில் வித்யாபாரதியின் கருத்தரங்கம் சென்னையில் நவம்பர் 11 அன்று நடைபெற்றது.

கருத்தரங்கத்தின் நோக்கம், மனித நேயமிக்க கல்வியை நல்ல பல உயர்ந்த பண்புகளை, மாணவர்களிடம் ஊட்டி வளர்க்கின்ற கல்வியைச் செயல்படுத்துவதே ஆகும்.

கருத்தரங்கில் சென்னையின் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் போன்று கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் பங்கு கொண்டனர்.

சின்மயா மிஷன் மூத்த துறவி சுவாமி மித்ரானந்தாஜி துவக்க உரையில் தேசியமும் தெய்வீகமும் பாரத நாட்டின் பாரம்பரிய சொத்து இதனைப் பாதுகாத்து மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினர்.

ஒருங்கிணைந்த கல்வியின் கூறுகளாக தேசிய, சமூக, கலாச்சார, ஆன்மீக அறிவுகளை உள்வாங்குதல், புரிந்துகொள்ளுதல், வாழ்வில் கடைப்பிடிப்பது, பாடத்திட்டத்தின் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் இடையே மாணவர்களுக்கு கற்பித்தல் என்று நான்கு குழுக்களாகப் பிரிந்து கலந்து கொண்டவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டார்கள்.

நிறைவுரையாக ஒருங்கிணைந்த கல்வியினை நடைமுறைப்படுத்துவதில் வித்யாபாரதி அமைப்பின் பல சீரிய முயற்சிகளை வித்யாபாரதியின் முன்னாள் அகில பாரதத் தலைவர் பேராசிரியர் பி.கே. மாதவன் விவரித்தார்.

(புகைப்படங்கள்: கு. வெங்கடேசன்)