விண்வெளித் துறையில் குவாட் நாடுகள்

பாரதம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள குவாட் நாடுகள் கூட்டமைப்பு சமீபத்தில் வாகன உற்பத்தி, இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களை பகிர்வதில் சீனாவின் ஆதிக்கத்திற்கெதிராக செயல்படுவதென முடிவெடுத்தன. இந்நிலையில், விண்வெளி சூழலையும் பூமியையும் ஆய்வு செய்வதற்கான பல்வேறு திட்டங்களில் இந்த நாடுகள் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உயர் தெளிவுத்திறன் கொண்ட எஸ் பேண்ட், எல் பேண்ட் செயற்கைக்கோள் ரேடாரை இஸ்ரோவும் நாசாவும் ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறது. நாசா இஸ்ரோவின் இந்த செயற்கைக்கோள் திட்டம், மேம்பட்ட ரேடார் இமேஜிங்கை பயன்படுத்தி, கூட்டு பூமி கண்காணிப்பு பணி, நில மேற்பரப்பு மாற்றங்களின் காரணங்கள், விளைவுகள் குறித்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இதனைத்தவிர, பல்வேறு விண்வெளி திட்டங்களுக்காக, இஸ்ரோ தலைவர் சிவன், கடந்த பிப்ரவரியில் ஆஸ்திரேலியா விண்வெளி நிறுவனத்தின் தலைவர் என்ரிகோ பலெர்மோவுடன் பேசியுள்ளார். மார்ச் 11ல் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமைத் தலைவர் டாக்டர் ஹிரோஷிம யமஹாவுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார். குவாட் நாடுகளுக்கு இடையிலான அரசியல் ஒத்துழைப்பு நல்லபடியாக வளர்ந்து வரும் சூழலில், அது மற்ற பகுதிகளிலும் இயற்கையாகவே தன் கூட்டுறவை வளர்க்கும், பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.