பாரத நாட்டை உலக அரங்கில் விண்வெளி போட்டியில் முதன்முதலில் ஈடுபடுத்திய பெருமை டாக்டர் விக்ரம் சாராபாயையே சேரும். முதன் முதலாக ஆரியபட்டா என்ற செயற்கை கோளை 1975ல் விண்ணில் செலுத்தி ஒரு புதிய விண்வெளி வரலாற்றை உருவாக்கியவர். அதனால் அவர் இந்திய விண்வெளியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
டாக்டர் அப்துல் கலாம் போன்ற இளைஞர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களுக்கு ஊக்கமளித்து செயல்பட வைத்த இவர், தோல்விகளை சந்தித்தாலும் தளர்ந்துவிடக்கூடாது என்று அறிவுரை கூறி அவர்களை ஊக்கமளித்து உயர்நிலை பெற வைத்தார் என்பதும் சிறப்பு. உலக புகழ்பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி ராமனுக்கு கீழ் காஸ்மிக்ரே பற்றி ஆராய்ச்சி செய்தார்.
இந்திய வணிக மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.ஏ) இது உலக திறன் படைத்தது. மேலும் ஆமதாபாத்தில் நேரு அறக்கட்டளை அபிவிருத்தி நிறுவனம், ஆமதாபாத் டெக்ஸ்டைல்ஸ் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட்ட எண்ணற்ற நிறுவனங்களையும், தொழில் கூடங்களையும், கல்வி நிறுவனங்களையும் பாரதத்தின் முன்னேற்றம் கருதி தொடங்கினார்.
1962ல் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அன்று நாம் எல்லோரும் வீணாக விண்வெளியில் பணத்தை முடக்குகிறோம் என்று கூறினார்கள். அப்போது அவர், ஒரு சிலர் நமது விண்வெளி ஆராய்ச்சி தேவையா என்று கேட்கின்றனர். ஆனால் எங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியின் தேவையை பற்றி ஒரு சந்தேகமும் இல்லை. நாம் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளுடன் விண்வெளியில் போட்டி போடும் எண்ணமும் இல்லை. ஆனால் நாம் நமது மக்களுக்கு முன்னேறிய தொழில்நுட்பம் மூலம் நல்ல சேவை செய்ய முடியும் அதில் நாம் யாருக்கும் பின் தங்கியவர்கள் இல்லை என்று உறுதிபட கூறினார்.
அவரின் அந்த தீர்கதரிசனம் எவ்வளவு உண்மை என்று தற்போது தெரிகிறது. இன்று நமது வானொலி டெலிவிஷன், தொலைபேசி, அலைபேசி எல்லாமே செயற்கை கோள்கள் மூலமே செயல்படுகின்றன. இன்னும் எத்தனையோ நன்மைகள் செயற்கை கோள்கள் மூலம் உண்டு.
விக்ரம் சாராபாய் எப்போதுமே தவளை தாவலில் புதிய தொழிற்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் வேலை செய்யும் போது வேலை ஒன்றே தான் குறியாக இருக்க வேண்டும். அது தான் முதல் விதை. அது நன்றாக இருந்தால்தான் அதில் இருந்து வரும் விதைகளும் வீரியம் கூடியதாக இருக்கும் என்று கூறுவார்.
1966ல் ஹோமி பாபாஅணுமின் துறையின் தலைவராக இருந்தபோது டிசம்பர் மாதம் 30ம் தேதிஅகால மரணம் அடைந்தார்.