விண்ணுக்கு பாய ‘கார்டோசாட்-3’ தயார் நிலையில்

நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. – ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ. தற்போது ராணுவ ஆய்வுகளுக்கு உதவுவதற்காக கார்டோசாட் – 3 செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

 

                                      Cartosat-3, launch, ISRO,tomorrow, Nov 27,கார்டோசாட் - 3

அதனுடன் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. – சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து நாளை காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்கிறது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள கார்டோசாட் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் நாட்டின் எல்லை பகுதிகளை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.