விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

 

‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, ‘இன்சாட் – 3டிஎஸ்’ செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.

 

இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து   (பிப்.,17) மாலை, 5:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட். இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 

புயல், மழை, வெள்ளம்; துல்லியமாக ‘இன்சாட் – 3டிஎஸ்’ செயற்கை கோள் கணிக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.