விக்கிபீடியாவுக்கு உத்தரவு

விக்கிபீடியாவில் வெளியிடப்பட்டுள்ள பாரதத்தை குறித்த தவறான புகைப்படத்தை உடனடியாக நீக்கும்படி மத்திய அரசு விக்கிபீடியாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த படத்தை மங்கோஸ்டார் எனும் விக்கிபீடியா பயனாளி ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் விக்கிபீடியாவின் பல்வேறு கட்டுரைகளில், பல மொழிகளில் இடம்பெற்றுள்ளது. விக்கிபீடியா இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. எனவே அவற்றை விக்கிபீடியா உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மத்திய அரசு அந்த நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மற்ற அடாவடி இணையதளங்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்.