வார ராசிபலன் – விகாரி வருடம், மார்கழி 06 முதல் மார்கழி 12 வரை( டிசம்பர் 22 – 28) 2019

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: பொருளாதார வளம் தொடர்ந்து வளர்ச்சியைத் தரும். சக ஊழியர்களின் உதவியால் நன்மை அதிகரிக்கும். பெண் அதிகாரியினால் பதவி உயத்வு, ஊதிய உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். நேர்மையை பேச்சிலும் செயலிலும் கடைபிடித்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

பெண்மணிகள்: இல்லறத் துணையின் அறிவுரைப்படி சில நல்ல விஷயங்களை நடத்திக் காட்டுவீர்கள். குடும்பப் பிரச்சினைகள் தீரும். தேவையானப் பொருட்கள் கிடைக்கும். திருமணம் நடைபெறுவதற்கான முயற்சிகள் நடைபெறும். அலைச்சலைத் தவிர்த்து ஆரோக்கியம் பேணவும்.

மாணவ மணிகள்: உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களின் சுயவாழ்க்கையில் தலையிடாதீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சலுகைகளை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

அரசியல்வாதிகள்: உழைப்பு அதிகரிக்கும். பாராட்டும் கிடைக்கும்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: அதிகர் பணியினால் அயர்ச்சி உருவாகும். அரசு ஊழியர்களின் செயல்கள் விமர்ச்சிக்கப்படும் என்பதால் பணியில் கவனம் வைக்க வேண்டும். சிலருக்கு பதவி உயர்வினால் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். அதிகாரிகளுடன் வலக்கு வாதம் தவிர்க்கவும்.

பெண்மணிகள்: உறவினர்களால் குடும்பத்தில் சச்சரவு ஏற்படலாம். கருத்து வேறுபாடுகளை களைய முயற்சி செய்யவும். இல்லறத் துணையின் ஆலோசனையிப் பெறவும். குடும்பத்தில் சுபச் செலவு ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை அவசியம் தேவை.

மாணவ மணிகள்: போட்டிகளில் வெல்லலாம். சகமாணவர்களிடம் நட்புடன் பழகவும்.

சிறுதொழில், வியாபாரம்: அரசு ஆதரவு கிடைக்காது. தேவையற்ற நட்புகளை தவிர்க்கவும். அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கை தேவை.

அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்க தாமதமாகும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: சமூகத்தில் முக்கியமான நபரின் நட்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். அதேசயமம் அலுவலகப் பணியின் பாதிக்காத வகையில் உங்களுடைய நேரத்தை செலவிடலாம். சிலரின் ஆசைவார்த்தைக்கு மயங்கி விடாதீர்கள். வம்புகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனத்துடன் பணியாற்றவும்.

பெண்மணிகள்: உறவினர்கள் தோழிகள் வழிய நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள்  நடைபெறும். உறவினர்களின் கருத்துக்களை மென்மையான வழியில் இல்லறத் துணையிடம் எடுத்துரைக்கவும். சேமிப்பின் அவசியத்தை உணர்வீர்கள்.

மாணவ மணிகள்: விருப்பத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள். ஆய்வு மனப்பான்மையுடன் உயர்கல்வி லட்சியம் தோன்றும்.

சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்கள், பங்குதாரர்களின் பிரச்சினைகளால் பிரச்சினை உருவாகலாம். அமைதியாக, ஆலோசித்து முடிவு எடுக்கவும். முக்கிய முடிவுகளை ஒத்திப்போடவும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் எண்ணத்தை புரிந்துகொண்டு செயல்படவும்.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: உடன் பணியாற்றுபவர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படலாம். பாதகம் செய்பவர்கள் அருகில் இருப்பார்கள் என்பதால் ரகசியம் பாதுகாக்கவும்.

பெண்மணிகள்: ஆலய வழிபாடு மனஅமைதி கிடைக்கும். இல்லறத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேறு ஒருவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதேசமயம் வீட்டிற்கு தேவையான வசதிகளை பெறுவீர்கள்.

மாணவ மணிகள்: போட்டிகளில் வெற்றி பெறலாம். கல்வியில் விருப்பப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: உடல்நிலை பாதிப்பினால் தொழிலில் கவனம் குறையும். நிர்வாகத் திறனால் ஊழியர்களை வழிநடத்துவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவுடன் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள்: உடனிருப்போரால் பிரச்சினை வரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: பொருளாதார வளம் அதிகரிக்கும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். பதவி உயர்வும் அதிகரிக்கும். அதே சமயம் குழப்பமான மனநிலையில் முக்கிய நடவடிக்கைகளை தீர்மானிக்காதீர்கள். உடல்நிலை பாதிக்கப்படலாம். அரசு வேலை செய்பவர்கள் உயரதிகாரிகளால் அல்லலுக்கு ஆட்படலாம்.

மாணவ மணிகள்: ஆசியர்கள், நண்பர்களால் வெற்றி கிடைக்கும். அனைத்து போட்டிகளிலும் வெற்றி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: வாடிக்கையாளர்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை நீக்க வேண்டும். லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: தொண்டர் ஆதரவு கிடைக்கும். சொத்துகள் சேரும்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: பணி நிமித்தமாகவும், சுய விஷயமாகவும் அலைச்சல் இருக்கும். அதே சமயம் அலுவலக வேலையை ஒத்தி வைக்கவும் முடியாமல் பதட்டம் நிலவும். உயரதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பது கடினமாக இருக்கும். உங்களின் பணியை நீங்களே செய்வது பிரச்சினையை தவிர்க்கும்.

பெண்மணிகள்: உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாரிசுகளால் பெருமை உண்டு. இல்லறத் துணை உங்களின் மேன்மையை உணர்வார். சில விஷயங்களில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். கணவர் வீட்டாருக்கு உதவி செய்யுங்கள்.

மாணவ மணிகள்: கல்வியில் அதிக அக்கறை காட்டுங்கள். உங்களது வளர்ச்சிக்கு முயற்சி தேவை.

சிறுதொழில், வியாபாரம்: அதிக கவனத்துடன் செயல்படவும். பொருள்கள் காணாமல் போகலாம். அரசு விவகாரங்களில் அக்கறை தேவை.

அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவு கிடைக்காது. தொண்டர்கள் ஆதரிப்பார்கள்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: பொறுமையுடன் செயல்படவும். அனைவரிடமும் பரிவுடன் பழகவும். சில பணிகளை செய்ய முடியாமல் தடைகள் ஏற்பட்டாலும், கடுமையாக செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். கோபம் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால் சிச்சை அவசியம்.

பெண்மணிகள்: திருமண ஏற்பாடுகளால் இளம் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆலய வழிபாடு நெகிழ்ச்சி தரும். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் பெருமைப்படத்தக்க வகையில் அந்தஸ்து அதிகரிக்கும்.

மாணவ மணிகள்: நண்பர்களுடன் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். தேர்வுகளில் முழு ஈடுபாட்டுடன் இருந்தால்தான் மதிப்பெண் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தர்ம சிந்தனையுடன் உதவி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: அதிருஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு அதிகரிக்கும். பொறுப்புள்ள பதவியும் கிடைக்கும்.

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களின் பணிகளில் இடையூறு செய்பவர்கள் விலகிச் செல்வார்கள். உயர் பதவிக்கும் உயர் ஊதியத்திற்கும் பரிந்துரைக்கப்படுவீர்கள். பணி விஷயமாக தேவையற்ற பயத்தை நீக்கவும். சக ஊழியர்களிடம் விமர்சனம் தவிர்க்கவும். அதேசமயம் பொருளாதாரம் பலமாகவே இருக்கும்.

பெண்மணிகள்: குடும்பத்து உறுப்பினர்களிடம் சச்சரவுகளைத் தவிர்க்கவும். சிலருக்கு தாய்வீடு சென்று வர விருப்பம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் களவாடப்படலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. விட்டுக்கொடுத்து நிம்மதியை பெறுங்கள்.

மாணவ மணிகள்: உதவித்தொகைக்கான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சிக்கனமாக செயல்பட வேண்டிய நேரம் இது.

சிறுதொழில், வியாபாரம்: அரசு ஆதரவு இப்போது கிடைக்காது. அதேசமயம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிலுவைத்தொகை கைக்கு வந்து சேரும்.

அரசியல்வாதிகள்: மக்களின் பணியில் கவனம் செலுத்தவும்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: குடும்பத்தை விட்டு வெளியூர் செல்ல வேண்டியது இருந்தாலும் எதிர்கால நன்மைக்காக ஏற்றுக்கொள்ளுங்கள். புதிய முன்னேற்றத்திற்கான அடித்தளம் இடுவீர்கள். கட்டளையிடும் பதவியும் கிடைக்கும். வாக்கு வன்மையால் ஆதரவு பெருகும்.

பெண்மணிகள்: உங்களது பெயரில் வீடு, மனை பதியலாம். சிலருக்கு திருமண எற்பாடுகள் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். நெடுநாள் உபாதைகள் நீங்கி புதுப்பொலிவுடன் விளங்குவீர்கள். பரிசுகள் கிடைக்கும்.

மாணவ மணிகள்: புரியதா பாடத்தை கேட்டு தெளிவாக்கிக் கொள்ளுங்கள். பணிவாக நடந்துகொள்ளவும். போட்டிகளில் வெற்றியும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: செலவுகள் அதிகரிக்கும் அளவுக்கு தனலாபமும் கிடைக்கும். புதிய நிறுவனங்கள் ஆதரவு தரும்.

அரசியல்வாதிகள்: அனைவரையும் ஆதரித்துச் செல்லவும்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களின் செயலாற்றும் தன்மையினால் முன்னேற்றம் கிடைக்கும். சிலர் அயல்நாடு செல்வதற்கு வாய்ப்புகள் உருவாகும். சிக்கன நடவடிக்கை தேவை. அலுவலகப் பிரச்சினைகள் தீர்ந்துநிம்மதி கிடைக்கும்.

பெண்மணிகள்: ஆரோக்கியத்தில் அக்கறை ஏற்படுத்திக் கொள்ளவும். செலவுகளை கட்டுப்படுத்தவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க சுற்றுலா செல்லலாம். சிலருக்கு புதிய வாகனம் கிடைக்கும்.

மாணவ மணிகள்: அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். உங்களின் அயராத உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு என்பதை உணருவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: அதிகம் உழைத்தாலும், தனலாபமும் அந்நிய நிறுவன ஆதரவு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: தலைமை மரியாதைக்குரிய பதவி தரும் சாதனை செய்வீர்கள்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: நெடுநாட்களாக இருந்த பிரச்சினைகள் விலகும். உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பதவி, அந்தஸ்து கிடைக்கும். ஊக்கத் தொகையும் கிடைக்கும். வாக்குவன்மையால் அனைவரிடமும் மரியாதை உருவாகும்.

பெண்மணிகள்: மருத்துவ செலவுகள் குறையும். உடல் நலம் பெற்று மெருகு உருவாகும். இல்லறத் துணையின் ஆதரவுடன் உங்களின் விருப்பங்கள் பூர்த்தி ஆகும். செயலாற்றும் தன்மையினால் வெற்றி கிடைக்கும்.

மாணவ மணிகள்: அதிக அக்கறையுடன் படிக்க வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலில் முன்னேற்றம் ஓங்கும். கெளரவ மூலமும் வருவாய் பெருகும்.

அரசியல்வாதிகள்: தொண்டர் பலத்தால் பதவி கிடைக்கும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களது பணியில் அதிக அக்கறையுடன் செயல்படவும். தேவையற்ற வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு பணி மாற்றமும், ஊர் மாற்றமும் கிடைக்கலாம். சக ஊழியர்களிடம் இனிமையாகப் பழகவும்.

பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தில் தக்க ஆலோசனை பெற்று சிறப்பாக பணியாற்றுவீர்கள். சுப காரியங்கள் நடைபெறுவதற்கான  முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு வேலைக்கான உத்திரவாதமும் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலை விருத்தி செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு ஆதரவுடன் திட்டமிடுங்கள்.

அரசியல்வாதிகள்: தலைமைக்கு நம்பிக்கையுடன் இருங்கள். சக கட்சியினருடன் இணைந்து பணியாற்றவும்.