வாரணாசி ஞானவாபி வளாகம்: ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ஞானவாபி வளாக பிரச்னை தொடர்பான வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்தது. ஹிந்து மக்கள் இந்த வளாகத்தில் பூஜை செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. முஸ்லிம் அமைப்பு சார்பில் தாக்கலான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

17ம் நுாற்றாண்டில் இங்கு இருந்த கோவிலை இடித்து, அதன் மீது இந்த வளாகத்தை, முகலாய அரசர் அவுரங்கசீப் கட்டியதாக ஹிந்துக்கள் சிலர், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி வளாகம், ஏற்கனவே இருந்த கோவிலை இடித்து அதன் மீது கட்டப்பட்டதா என்பது குறித்து, தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து அந்த வளாகத்தில் அறிவியல் பூர்வமான விரிவான ஆய்வு நடத்தும்படி தொல்லியல் துறைக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இங்கு ஹிந்து மக்கள் பூஜை செய்ய அனுமதிக்கக்கூடாது என முஸ்லிம் அமைப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
முழு விசாரணைக்கு பின்னர் இன்று அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது.
இதில் ஹிந்து மக்கள் இந்த வளாகத்தில் பூஜை செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. முஸ்லிம் அமைப்பு சார்பில் தாக்கலான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.