வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமும், அதன் தாக்கமும்

பிஹார் மாநிலத்தில் எடுத்த வாக்களார் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம், போலி வாக்காளர்களும், பங்களாதேஷத்தவர்களும் அதிக அளவில் ஊடுருவி, வாக்காளர்களாக மாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் சிறப்பு திருத்தத்தின் மூலம், கோடிக்கணக்கான வாக்களார்களின் பெயர்கள் கேள்விக்குரிய வகையில் பதிவாகியுள்ளது. மேற்குவங்கம், தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், சுமார் 1.50 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, தமிழ்நாடு 74,72,207 வாக்காளர்களும், 63,66,000 வாக்காளர்கள் மேற்குவங்கத்திலும் நீக்கப்பட்டுள்ளார்கள். கடந்த சில வருடங்களாகவே பங்களாதேஷத்தவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டதால், அஸ்ஸாம் மாநிலத்தில் சுமார் 2.43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த மூன்று மாநிலங்களிலும் கணிசமான அளவில் பங்களாதேஷத்தவர்களும், ரோஹிங்கியா முஸ்லிம்களும் ஊடுருவி, வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்கள்.
மேற்குவங்க மாநில, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்படி 63.66 லட்சம் வாக்களார்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், கண்டுபிடிக்க இயலாதவர்கள் என குறிப்பிட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு திருத்தத்தின் மூலம் திருணமூல் காங்கிரஸ் கட்சி செய்த திருவிளையாடல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அலோ ராணி சர்க்கார், ஒரு திருணமூல் காங்கிரஸ் தலைவர், அவரின் குடியுரிமையை பற்றிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போதே, தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ‘பங்களாதேஷ் குடிமகள்’ என்று அறிவித்தது.
சோப்ரா தொகுதியில் திருணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹமிதுல் ரஹ்மான் பங்களாதேஷை சார்ந்தவர் எனக் கூறி வழக்கு தொடுக்கப்பட்டது, இது இன்னும் விசாரணையிலேயே இருக்கிறது. இதுபோல் பல வழக்குகள் நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா, தாமே நீதிமன்றத்தில் வழக்காடியும் கூட, நீதிமன்றத்தில் தனது நேர்மையை நிரூபிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மட்டும் போதுமானதல்ல; வயது மற்றும் வசிப்பிடத்திற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரிகள் (EROs) விண்ணப்பதாரரின் குடியுரிமை, வயது மற்றும் வசிப்பிடத்தை உறுதி செய்ய ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் அதிகாரம் கொண்டவர்கள் என தீர்ப்பு வழங்கிய பின்னர்தான், மம்தா அடங்கியதாக தெரிகிறது.
மற்றொரு புறம் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆசாத் முல்லிக் என்ற பாகிஸ்தான் நாட்டு நபர் போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அட்டை பெற்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.