வல்லுநர்கள் விண்ணபிக்கலாம்

சென்னை கிண்டியில் மாநில அரசின் தொழில்நெறி வழிகாட்டு மையம் உள்ளது. இங்கு மாணவர்களுக்கு, டி.என்.பிஎஸ்.சி, வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கற்பிக்க முன் அனுபவம் உள்ள பாட வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் statecareercentre@gmail.com என்ற மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனர் கே. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.