வறுமை என்பது பணத்தின் பற்றாக்குறை மட்டுமல்ல!..

வறுமை தொடர்பான விழிப்புணர்வை, பசிகொடுமையால் இருந்து மக்களை விடுப்பதற்காகவும் கோடி கோடியாய் பணம் வேண்டாம் – பசி தீர ஒரு வாய் உணவு போதும்.

உண்ண உணவு , உடுக்க உடை எதுவும் ஆசைப்பட்டபடி கிடைக்கலில்லை பெரிய கல்வியில் பயில வாய்ப்பில்லை! இதுபோன்று ஏராளமான வறுமைகள். எனது வாழ்க்கையில் நடைக்கல்லாக இருந்தது. வறுமை எனக்கு அனுபவத்தையும் , கஷ்டத்தையும் , பெரிய ஏக்கங்களையும் , தாக்கங்களையும் கற்றுக் கொடுத்தது.

மாற்றம் ஒன்றே மாறாதது;

வறுமை என்பது பணத்தின் பற்றாக்குறையால் மட்டுமல்ல! நம் அனைவரின் மனதின் பற்றாக்குறையால் மட்டுமேஎன்பது நிதர்சனம்.

அரசியல், கல்வி, வேளான்மை, பொருளாதாரம் என நம்நாடு எல்லாவற்றிலும் முன்னேறினாலும் வறுமையை ஒழிக்க முடியவில்லையே! நடைமுறையில் இல்லாத பன்பாட்டோடும் , பணத்தோடும் வாழ்பவர் ஒருபுறம்! ஒருவாய் தண்ணி இல்லாமல் இறப்பவர் மறுபுறம்! காரணம் மனித மனம்!

தனக்குள் இருக்கும் எதிர்மறை ( நான் என்ற) எண்ணம் தவிர்த்து! அதிகம் இருந்தால், இருப்பதை பகிர்ந்து உண்! வீண் ஆடம்பர செலவை வேண்டாமே. மீதி இருக்கும் உணவையோ , உடைமையோ, பணத்தையோ வீண் செய்ய வேண்டாமே.

அவர்களைப்போல் நசுங்கிய உள்ளங்கள் நலிந்து போகாமல் காப்பது எப்படி? என்பதை சிறிது நேரம் சிந்திக்க அவர்களை ஊக்கப்படுத்த சிறிய உதவிகரம் நீட்டினாலே போதும்

கொடிது கொடிது வறுமை கொடிது ( அதிலும் கொடிது வறுமையால் இறப்பது.

உதவி கரம்;

வறுமை என்னும் ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு – படகோட்டியாக சென்று நமக்கு கிடைத்த அனைத்து பொக்கிஷங்கருக்கும் இறைவனுக்கு நன்றி மலர்களை உரத்தாக்கிவிட்டு ! கைகளை கொடுப்போம் நடுக்கடலில் ( வறுமையில் ) இருப்பவர்களுக்கு ! எங்கே எப்போது என்று ஏங்கித் தவிக்கும்  அவர்களை கொஞ்சம் தூக்கிவிட்டால் போதும். அவர்கள்  துடிப்புடன் எழுந்து – தேவைகளை தேடி தேடி ஓடி அலைந்து சாமனியர்களாக மாறிவிடுவார்கள்!

அல்லல் படுபவர்களையும் , ஆதாரவற்றோர்களையும் கண்டு ஒதுங்காமல் – கரங்களையும் , மனங்களையும் தருவோம் ! வறுமையை ஒழிக்க பணம் மட்டும் போதாது! அதையும் தாண்டி நம் அரவணைப்பு, அன்பு, கருணை, பாரம், நேசம், நல்என்னங்கள், நற்சிந்தனைகள், நல்வழிக்காட்டுதலே முக்கியமான சாரம்சமாகும்! போதும் என்றே மனமே வறுமையை ஒழிக்கும் பொன் மருந்து!

வறுமைக்கு பணம் காரணமல்ல நம் மனமே என்று உணர்ந்து ! அகமகிழ்ந்து வாழ்ந்திடுவோம் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம் 

ரா.ஆனந்தி,BNYS.