வந்தே மாதரம் மற்றும் மூவர்ணக் கொடி : தேசிய உணர்வு

வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம், சிறப்பான உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்தியர்களுக்கு வந்தே மாதரம் பாடல் தைரியத்தையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. “தாய் மண்ணே வணக்கம்” என்ற பொருள்படும் இந்தப் பாடல், 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களை ஒன்றிணைத்து, தாய்நாட்டை ஒரு தாயாகப் போற்றும் உணர்வை வளர்த்து வருகிறது.
சுதந்திரத்திற்காக நமது நாட்டினர் பாடுபட்ட நீண்ட பயணத்தில் ஒன்றிணைந்த சின்னங்களாக தேசியக் கொடியும், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக வந்தே மாதரம் பாடலும் உருவெடுத்தன.
தேசியக் கொடியும், வந்தே மாதரம் பாடலும் நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் தொடர்பை உருவாக்கின. சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்களும், கனவுகளும், வளர்ச்சி அடைந்த (விக்சித்) பாரதத்தை உருவாக்க மிக முக்கியப் பங்கு வகித்தன.
இந்த ஆண்டு கொண்டாட்டங்களின் மிக முக்கிய அம்சம், மக்கள் வெளிக்காட்டிய வேற்றுமையில் ஒற்றுமை பண்பாடு. வந்தே மாதரம் பாடல், மூவர்ணக் கொடி (திரங்கா) யாத்திரைகள், போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவை இந்திய மக்களை தேசம் எங்கும் ஒன்றிணைத்தன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேசியக் கொடி மற்றும் வந்தே மாதரம் பற்றி இளைஞர்கள் அறிய வழிவகை செய்யப்பட்டன.
இசை, கலை, ரங்கோலி மற்றும் உள்ளூர் பாரம்பரியங்களைப் பயன்படுத்தி இந்தியர்கள் மூவர்ணக் கொடியை வரைந்து, தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மூவர்ணக் கொடியுடன் செல்ஃபி எடுக்கும் போக்கு அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே 8.24 கோடிக்கும் அதிகமான மூவர்ணக் கொடியுடன் செல்ஃபிகள் பதிவேற்றப்பட்டு உள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் 1.32 லட்சத்திற்கும் அதிகமான மாநில அரசுப்பள்ளி (பரிஷதியா வித்யாலயா) மற்றும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் (கே.ஜி.பி.வி) 1.41 கோடி குழந்தைகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.
இஸ்லாமிய மற்றும் உருது -பாரசீக கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ராம்பூர் ராஜா நூலகம், 2026 ஆகஸ்ட் 15 அன்று கொடி ஏற்றல் மற்றும் வந்தே மாதரத்தின் குழுப்பாடலுடன், 80வது சுதந்திர தினம் நிகழ்ச்சியை நடத்தியது.
பெங்களூருவில் உள்ள வித்யாசில்ப் அகாடமியில், 2026 ஆகஸ்ட் 14 − -15 அன்று, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 800 ஆசிரியர்கள்/பணியாளர்கள் மற்றும் ஆயிரத்து 500க்கும் அதிகமான பெற்றோர்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரல்கள் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.
கட்டுரையாளர்: அகிலபாரத செயலாளர், சன்ஸ்கார் பாரதி
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : குகத்யா