வடகிழக்கு:வடகிழக்கு மாநிலங்களில் வருகிற மாற்றம் நல்லாட்சி நடந்தது, நல்லதே நடக்கிறது!

வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், மிஸோராம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்களில், கடந்த ஐம்பதாண்டு காலமாக, பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் எதிராக மக்களை சில சக்திகள் தூண்டிவிட்டு வந்தன. மற்ற மாநிலங்களுக்கு இல்லாத ஒற்றுமை இந்த எட்டு மாநிலங்களுக்கும் உண்டு. இனம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றில் ஒற்றுமை உண்டு. ஒருபுறம் சீனா தனது கொடூர கரங்களால் அருணாசலப் அபகரிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது. மறு புறம் கிறிஸ்தவ மிஷனரிகள் வடகிழக்கு மாநிலங்களில் மத மாற்றத்தின் காரணமாக எட்டு மாநிலங்களையும் கிறிஸ்தவ மயமாக்க என்.ஜி.ஓ. படையை ஏவிவிட்டுள்ளன. இது ஒருபுறம் என்றால், பிரிவினைவாதிகள் இந்த நாட்டை பிளவுபடுத்த தொடர்ந்து நடத்திவரும் பயங்கரவாத சம்பவங்களும் உண்டு.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், பிரிவினைவாதிகளுக்கும் மதமாற்றத்தில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களுக்கும் பல்வேறு விதமாக தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

நாடு விடுதலை பெற்றபோது, மணிப்பூர், திரிபுரா ஆகிய இரண்டு மட்டுமே சமஸ்தானங்களாக இருந்தன. அஸ்ஸாம் ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்தது. அஸ்ஸாமிலிருந்து சில பகுதிகள் பிரித்து பல மாநிலங்கள் உருவாகின. 1963 டிசம்பர் 1ல் நாகாலாந்தும், 1972 ஜனவரி 21ல் மேகாலயாவும், 1972ல் மிசோரமும், 1987ல் அருணாசலப் பிரதேசமும் உருவாகின. இந்த மாநிலங்களுக்கு அருகில் உள்ள நாடுகள், வடக்கில் சீனா, கிழக்கில் மியான்மர், தென்மேற்கில் பங்களாதேஷ், வடமேற்கில் பூட்டான். 4,500 கி.மீ. தூரம் சர்வதேச எல்லையாக அமைந்துள்ள மாநிலங்கள் வடகிழக்கு மாநிலங்கள். இதை வைத்துதான் இந்த மாநிலங்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்ய இயலும்.

1947 ஆகஸ்ட் மாதம் நாடு விடுதலை பெற்றபின்னர், 2011ன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் கூடியிருக்கிறது. 1991 முதல் 2001 வரை வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 44.7 சதவீதம் கூடியிருக்கிறது. குறிப்பாக இன்றுவரை பிரச்சினைக்குரிய மாநிலங்களான அருணாசலப் பிரதேசத்தில்130.9 சதவீதம் கிறிஸ்தவர்களும் 73.4 சதவீதம் முஸ்லிம்களும் மக்கள் தொகையில் கூடியிருக்கிறார்கள். நாகாலாந்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 69.2 முஸ்லிம்களின் எண்ணிக்கை 69.6 சதவீதமும் கூடியுள்ளது. இவ்வாறாகவே மணிப்பூரில் 43.1 சதவீதமும் மிசோராமில் 122.5 சதவீதமும் மேகாலயாவில் 61.4 சதவீதமும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1991க்கு முன்பு இருந்த மக்கள் தொகையை விட உயர்ந்துள்ளது.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வின் காரணமாக இந்த எட்டு மாநிலங்களிலும் மதமாற்றத்துடன், பயங்கரவாதமும் தலைதூக்கியுள்ளது. எட்டு மாநிலங்களிலும் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் மலைவாழ் மக்கள்.   மத மாற்றம் ஏற்பட காரணமாக இருப்பவை, ஏழ்மை, படிப்பறிவு இல்லாமை, அரசின் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தாமை, அண்டை நாடுகளில் ஏற்படும் குழப்பங்கள். இவைகளுக்கு முடிவுகட்ட கடந்த பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதால், தற்போது மதமாற்றம் வெகுவாக குறைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஆற்றிய பணிகள் சில: மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதால் வடகிழக்கு மாநிலங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன் காரணமாக வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் சேவா பாரதி, வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், பிரண்ட்ஸ் ஆஃப் டிரைபல் சொசைட்டி, வன பந்து பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜன் சேவா சன்ஸ்தான், கீச்ண்டணாணூடிதூச் குடச்டிடுண்டடிடு –ச்டச்ண்ச்ணஞ்ட போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புகளுடன் இணைந்து   ஏகல் வித்யாலயா என்ற அமைப்பினர் ஆற்றிய பங்கு முக்கியமானது.

1995ம் வருடம் சங்க அமைப்புகள் 656 இடங்களில் மட்டுமே செயல்பட்டன. 2009ல், 5,198 இடங்கள் ஆனது. தற்போது இதன் 10,000க்கு மேல். திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மட்டும் 340 ஏகல் பள்ளி நடைபெறுகிறது. இதில் 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகிறார்கள். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு உண்மையான தேசப்பற்றும் காலையில் ஏகாத்மதா பாட்டும் சொல்லித் தரப்படுகிறது.   வித்யா பாரதி மூலம் 13,000 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக 10,000 பண்புப் பதிவுக் கேந்திரங்கள் நடத்தப்படுகின்றன.

அஸ்ஸாமில் வித்யா பாரதியின் 470 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் 1.19 லட்சம் மாணவர்கள் பயிலுகிறார்கள். அஸ்ஸாமில் மட்டும் ஏகல் வித்யாலயாவின் பள்ளிகள் 3,923. இதில் பயிலும் மலைவாழ் மாணவர்களின் எண்ணிக்கை 1,13,340. இந்தப் பள்ளிகள் மாநிலத்தின் 17 பகுதிகளில் நடைபெறுகிறது.

இவ்வாறு நடைபெறும் பள்ளிகளுக்கு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வழங்கிய நிதி உதவியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், நிறுத்தி விட்டார்கள். ஆனால் 2014ல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மேற்படி பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 14,321 மலைவாழ் பகுதியிலும் 48,448 கிராமங்களிலும் வனவாசி கல்யாண் ஆசிரமம் தனது பணியை செய்துகொண்டு இருக்கிறது. இதன் மூலம் 225 ஹாஸ்டல்கள், 202 பள்ளிகள், இரவுப் பள்ளிகள் 232, கோச்சிங் சென்டர் 100 என வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் பணியை செய்வதாலும், மத்திய, மாநில அரசுகளுக்கு சமமாக சேவை காரியங்களும் மேற்கொள்ளப்படுவதாலும் மேற்படி மாநிலங்களில் நடந்துவந்த கிளர்ச்சிகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது.

பயங்கரவாதம்

பயங்கரவாதம் எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அஸ்ஸாமில் 59 பிரிவினைவாத அமைப்புகள் இருப்பதாகவும், இதில் உல்பா காமதாபூர் லிபரேஷன் ஆர்கனைசேஷன் என்ற அமைப்புகள் மட்டுமே பயங்கரவாத அமைப்பாக கருதப்படுகின்றன. மணிப்பூரில் 42 பிரிவினைவாத இயக்கங்கள் செயல்படுவதாகவும், மூன்று முக்கியமான; மூன்று முக்கியமானவை இந்த இரண்டு மாநிலங்களில் உள்ளது போலவே திரிபுராவில் 28 அமைப்புகளும் நாகாலாந்தில் 10 அமைப்புகளும் மேகாலயாவில் 13 அமைப்புகளும் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் கடந்த இரண்டு ஆண்டு காலமாக எந்த விதமான பெரிய தாக்குதலிலும் ஈடுபடவில்லை. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்குரிய திட்டங்களை கொண்டு வந்ததுடன், சரணடைந்த பயங்கரவாதிகளின் வாழ்க்கைக்கு வழி செய்து கொடுத்ததுள்ளதுமே முக்கியமான காரணம்.

சரணடைந்தவர்களின் பெயரில் ரூ1.5 லட்சம் வங்கியில் டெபாஸிட் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்துக்கொள்ளும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். இந்த டெபாஸிட் தொகையிலிருந்து கடன்பெற்று சுய தொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் மாதம் 1க்கு ரூ3,500 ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். இந்த மானியம் ஒரு வருடம் என்பது, சுய தொழில் துவங்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படுகிறது. மணிப்பூரில் சரணடைந்தவர்களுக்கு மட்டும் ரூ 2.5 லட்சம் உதவியுடன், மாதம் 1க்கு ரூ 4,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயங்கரவாதிகள் தங்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அஸ்ஸாம் பிரிவினைவாதிகளுடன் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2011, நவம்பர் 25ல் ஓர் உடன்பாடு ஏற்பட்டும், அதை செயல்படுத்தாமல் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் 2012, அக்டோபர் 8ல் போடப்பட்ட உடன்படிக்கையும், அமல்படுத்த முடியாத காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், 2015 நவம்பர் 24 அன்று உல்பாவுடன் ஒரு புதிய உடன்பாடு எட்டப்பட்டு, 2011 செப்டம்பர் 3 அன்று என்ன கோரிக்கை வைத்தார்களோ, அந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.   இதை போலவே 9 ஆதிவாசிகள் சரணடைந்தபோது வைத்த கோரிக்கைகளை முழு பரிசீலனை செய்ய அரசு முன் வந்துள்ளது. இதை விட முக்கியமான ஒன்று பங்களாதேஷ் நாட்டிலிருந்து அஸ்ஸாமில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவது சம்பந்தமாக முந்தைய அரசு கொண்டுவந்த திட்டத்தை அமல்படுத்த ஒரு குழு நியமிக்கப்பட்டள்ளது.

ஆகவே கலவர பூமியாக காட்சியளித்த அஸ்ஸாம் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் உள்ளது. மியான்மர் தேசத்திலிருந்து வெளியேறும் ரோகிங்கியா முஸ்லிம்களால் ஏற்படும் பிரச்சினைக்கும், மியான்மர் நாட்டுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு உருவாக்கப்பட்டதும் அமைதியான சூழ்நிலைக்கு வித்திட்டது. இந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு முக்கியமான காரணம், கடந்த சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போடோ மக்கள் முன்னணியுடன் தேர்தல் கூட்டு ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றியவுடன், நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வுகாண முற்பட்டதும் ஒன்று. மேலும் போடோ மக்கள் கவுன்சிலுக்கு சுய அதிகார அந்தஸ்து கொடுக்கப்பட்டதை முழுமையாக ஏற்று செயல்படுவதும் ஒரு காரணம்.

நாகாலாந்தில் உள்ள ‡குஇ‡ அமைப்பின் இரு பிரிவினருடன் 2017 ஏப்ரல் 27 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக உறுதியளித்து, சண்டை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தேசிய நீரோட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு இவர்கள் உடன்பாட்டிற்கு வர வேண்டிய நிலையை ஏற்படுத்திய அரசு மோடி அரசு. மியான்மர் பகுதியில் பயங்கரவாத பயிற்சி முகாம் அமைத்துள்ள நாகா தீவிரவாதிகள் எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினர் 19 பேர்களை சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் மியான்மர் நாட்டின் உள்பகுதியில் நுழைந்து 50க்கும் மேற்பட்ட பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்ததுடன், சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று குவித்த சம்பவம் முக்கியமானது.

வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ. 6,400 கோடியில் இரண்டு வழிச் சாலைகள். ரூ.35,000 கோடியில் கூணூச்ணண் அணூதணச்ஞிடச்டூ ஏடிஞ்டதீச்தூ தேசிய நெடுஞ்சாலை திட்டம். அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் தீட்டிய திட்டம் இது. வடகிழக்கு மாநிலங்களில் புதிய ரயில் பாதைகள் தொடங்க ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இதன் தொடக்கம் அருணாசலப் பிரதேசத்தில் துவங்கப்பட்டது. அஸ்ஸாமிலிருந்து மேகாலாயவிற்கு செல்லும் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேகாலாயாவில் துவங்கப்பட்ட முதல் ரயில் பாதையில் கௌஹாத்திலிருந்து மென்டிபத்தர் நகரம் வரை செல்லக் கூடியது. அருணாசலப் பிரதேசத்திலிருந்து டெல்லி வரை செல்லும் ரயில் 7 வடகிழக்கு மாநிலங்கள் வழியாக செல்லக் கூடிய வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு வளர்ச்சிப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நிலவிவந்த பதற்ற சூழ்நிலை மாறியது மட்டுமில்லாமல், மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கு திட்டம் வகுத்து செயல்படுத்த துவங்கியதால், வடகிழக்கு மாநிலங்கள் கூட பாரத நாட்டின் தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டது. இவ்வாறு வளர்ச்சிப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக வடகிழக்கு எல்லை மாநிலங்களில் கடந்த ஆண்டுகளில் நடந்த பயங்கரவாத சம்பவங்கள் குறையத் தொடங்கின.

அருணாசலப் பிரதேசத்தில் 2014ல் 33 சம்பவங்களும் 2015ல் 36 சம்பவங்களும் நடந்தன. ஆனால் 2016ல் வெறும் 13 சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தில் 2014ல் 246 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் 2015ல் 81 சம்வங்களும் 2016ல் 29 சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மணிப்பூரில் 229 சம்பவங்கள் 2015ல் நடந்துள்ளன. 2016ல் 81 சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளது. ஆகவே பாரத அரசின் முறையான நடவடிக்கையின் காரணமாக பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன.

நல்ல ஆளுகையால் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும் என்பதற்கு வடகிழக்கு மாநிலங்கள் துல்லியமான முன்னுதாரணம்.