வசுதைவ குடும்பகத்தை குறிக்கும் அம்ரித் உத்யன்

டெல்லியில் உள்ளகுடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்களுக்கு பழைய முகலாயத் தோட்டம் (முகல் கார்டன்) என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரதம் சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டை குறிக்கும் வகையிலும் தேசத்தின் அமிர்த காலத்தை குறிப்பிடும் விதமாகவும் ‘அம்ரித் உத்யன்’ என்ற பொதுப்பெயர் வைக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் ஷாஹித் சயீத், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். ‘அம்ரித்’ என்றால் அழியாதது அல்லது கடவுள்களுடன் இணைந்து பார்க்கப்படும் சக்தி என்று பொருள். எனவே, ‘உத்யன்’ இவ்வளவு பெரிய முக்கியத்துவமும், இவ்வளவு பெரிய பிரம்மாண்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. ‘அம்ரித் உத்யன் பாரதத்தின் நித்திய எண்ணம், இது ‘வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்)’ என்பதைக் குறிக்கிறது. இது பாரதத்தின் பண்டைய முனிவர்களை நினைவூட்டுகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை இந்திரபிரஸ்தத்தை நிறுவ தூண்டினார். இந்த இடத்தில்தான் காண்டவபிரஸ்தம் இருக்கிறது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு தேசிய வீரர்களின் பெயர்களை சூட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் உறுப்பினர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெயர்கள் மாற்றப்பட்ட தீவுகளில் பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களின் பெயர்களும் அடங்கும். பாரதத்தினரை நசுக்கிய பிரிட்டிஷ் ஜெனரல்களான ‘ஹேவ்லாக்’, ‘நீல்’ மற்றும் ‘ராஸ்’ ஆகியோரின் பெயர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை எண்ணற்ற சித்திரவதைகளுக்கு ஆளாக்கியவர்கள். அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவே கூடாது என்று மஞ்ச் நம்புகிறது. பெயர்களை மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்றார்.