தேசமே பிரதானம் ஆர் எஸ் எஸ் குறித்து பிரதமர் பெருமிதம்

ஆர்.எஸ்.எஸ் நூறாண்டுகளை நிறைவு செய்வதையொட்டி சிறப்பு தபால்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.  நிகழ்ச்சியில் அவர் பேசியதன் சாராம்சம்:

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிறுவனர் பரம பூஜனீய டாக்டர் கேசவ் பாலிராம் ஹெட்கேவார் அவர்களின் பாதங்களில் என் மனமார்ந்த வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர் 1925-ஆம் ஆண்டு விஜயதசமி அன்று, இந்த அற்புதமான அமைப்பைத் தொடங்கினார். இன்று, இந்த மாபெரும் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு நாம் அனைவரும் பாக்கியம் பெற்றுள்ளோம். இது ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி, பெருமை மற்றும் உத்வேகத்தை அளிக்கும் தருணமாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸி-ன் 100 ஆண்டு தேச சேவையைக் குறிக்கும் வகையில் ₹100 மதிப்புள்ள நினைவு நாணயத்தையும், சிறப்பு தபால் அஞ்சலட்டையும் வெளியிட்டுள்ளோம். இந்த நாணயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக பாரத மாதாவின் உருவத்தை இது கொண்டுள்ளது. அவர் சிங்கத்தில் அமர்ந்து, வரத முத்திரையில் ஆசி வழங்குவதாகவும், ஸ்வயம்சேவகர்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாணயத்தில் ஆர்எஸ்எஸ்-ஸின் முழுமொழி ‘ராஷ்ட்ராய ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ராய, இதம் ந மம’—அதாவது ‘எல்லாம் தேசத்துக்கு அர்ப்பணிக்கப் படுகிறது, எல்லாம் தேசத்தினுடையது, என்னுடையது இல்லை’ என்று பொறிக்கப் பட்டுள்ளது.

நினைவு தபால் தலையில்  1963-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் பங்கேற்ற முக்கியமான தருணத்தைக் காட்டுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ஸ்வயம்சேவகர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளித்தனர். பல ஸ்வயம்சேவகர்கள் சிறைவாசத்தையும், மாபெரும் தியாகங்களையும் எதிர்கொண்டனர்.

இந்த அமைப்பு தடை செய்யப்பட்டபோதும், அவமானிக்கப்பட்ட போதும், தாக்குதல்களை எதிர்கொண்ட போதும், ஒருபோதும் கசப்புடன் அல்லது பழிவாங்கும் எண்ணத்துடன் யாரையும் பார்க்கவில்லை. ஆர்எஸ்எஸ் எப்போதும் இத்தகைய சவால்களுக்கு மேலாக உயர்ந்து, தேசத்தின் மீதான அன்பையும், அர்ப்பணிப்பையும் மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்தல் 5 நல்மாற்றங்கள், குடும்ப மேன்மை, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம், சுயசார்பு, குடிமக்கள் கடமை ஆகியவை, 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம்  என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறும் போது, ஆர்எஸ்எஸ்-ஸின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

இந்த நூற்றாண்டு விழா கடந்த காலத்தைக் கொண்டாடுவது மட்டுமல்ல, எதிர்காலத்துக்கான ஒரு அழைப்பாகவும் உள்ளது. வலுவான, செழிப்பான, மற்றும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்குவதற்கு நமது உறுதியை புதுப்பிக்க இது ஒரு வாய்ப்பாகும். `தேசமே பிரதானம்’ என்ற கருத்தை முன்வைப்பதன் மூலம், எந்த சவாலையும் வெல்ல முடியும் என்பதை நமக்கு காட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.