ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதை – தனுஷ்கோடியில் ஐஐடி குழுவினர் ஆய்வு

புயல் தாக்கி 54 ஆண்டுகளுக்குப் பிறகு, தனுஷ்கோடியில் ரூ.208 கோடி மதிப்பில் உருவாக உள்ள புதிய ரயில் பாதையை, சென்னை ஐஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புயல் தாக்கி 54 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ்கோடிக்கு ராமேசுவரத்தில் இருந்து 17.20 கி.மீ தொலைவுக்கு ரூ.208 கோடியில், புதிய ரயில் பாதை அமைப்பதற்காக கடந்த மார்ச் 1-ல் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொ லிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி னார்.

இதற்காக ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தின் மூலம் சர்வே நடந்தது. இந்த வழித்தடத்தில் ஜடாயு தீர்த்தம், கோதண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

இந்தத் திட்டத்தை விரைவி லேயே தொடங்கவும் முடிவு செய் யப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐஐடி அதிகாரிகள் ராமேசுவரம் ரயில் நிலையம் முதல் கரையூர், ஜடாமகுட தீர்த்த கோயில், முகுந்த ராயர் சத்திரம் வழியாக தனுஷ் கோடி வரை பழைய ரயில் பாதை சென்ற வழித்தடத்தில் ரயில்வே நிலத்தை ஆய்வு செய்து வரு கின்றனர்.

ரயில்வே பாதையில் பல இடங்களில் தற்போது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அடை யாளம் காணப்பட்டு, அவற்றை விரைவில் அகற்ற ரயில்வே நிர் வாகம் நடவடிக்கை எடுத்து வரு கிறது.

தனுஷ்கோடி ரயில் மூலம் ராமேசுவரம் வரும் பக்தர்கள் தனுஷ்கோடி கடலில் புனித நீராட முடியும். மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் தனுஷ்கோடியில் அதிகரிக்கும்.