ரிபப்ளிக் டிவி ஒளிபரப்ப தடை

நம் தேசத்தில் உள்ள மிக சில நடுநிலை ஊடகங்களில் ரிபப்ளிக் தொலைக்காட்சியும் ஒன்று. மகாராஷ்டிர அரசின் அநியாயங்களை ரிபப்ளிக் தைரியமாக வெளியிட்டு வருகிறது. இதனால் பல சங்கடங்களை சந்திக்கும் சிவசேனா அந்த தொலைக்காட்சி சேனலை தங்கள் மாநிலத்தில் ஒளிபரப்பக் கூடாது என அங்குள்ள ஹாத்வே, டென், சிட்டி கேபிள் உள்ளிட்ட கேபிள் டிவி உரிமையாளர்களை மிரட்டியுள்ளது. இது இந்திய அரசியலைப்பு சட்டப்பிரிவு 19 (1) (A) படி விதிமுறை மீறல். பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எனவே,எங்களை தடைசெய்ய முடியாது என தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
நியூஸ்18 தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குணசேகரனுக்கு வாதாடியவர்கள், சக தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்களா?