ராஜ்யசபா எம்.பி.,க்களாக நட்டா, எல்.முருகன், சோனியா தேர்வு

ராஜ்யசபா எம்.பி.,க்களாக ம.பி.,யில் இருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். ்குஜராத்தில் இருந்து பாஜ தேசிய தலைவர் நட்டாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட 4 பா.ஜ.,வினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து அந்த 4 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ராஜ்யசபாவுக்கு போட்டியிட ம.பி., மாநிலத்தில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனையடுத்து எல்.முருகன் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிட்ட முருகன் உள்ளிட்ட 5 பேரும் போட்டியின்றி தேர்வானார்.

அதேபோல் 77 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவும் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.