மோடி 2.0

மோடி இரண்டாம் முறை பிரதமரான போது அது முதல் முறையை விடவும் சவாலாக இருந்தது. தீநுண்மீ உலகை தாக்கியது. அது இந்தியாவை வெகுவாக பாதித்தது. கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் வரை இந்தியா காத்திருக்கும். அவர்கள் ஏற்றுமதி செய்ய முடிவு எடுத்ததும் இந்தியா அதை இறக்குமதி செய்யும். அதுவரை இந்தியர்கள் துன்பப்படுவார்கள்.

இந்தியா தடுப்பு ஊசியை தயாரிக்கும் என்று மோடி அறிவித்த போது உலகம் அவரை எள்ளி நகையாடியது. உள்நாட்டிலும் எதிர்ப்பாளர்கள் கேலி செய்தனர். மோடி தடுப்பூசியை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டார். உள்ளூர் தடுப்பூசி தயாராகும் வரையில் காத்திருக்க முடிவெடுத்த ார். இந்தியா ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகளை தயாரித்தது.

நம் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி இருக்கும் அமெரிக்காவை விடவும் சிறப்பாக, நாட்டில் உள்ள 110 கோடி மக்களுக்கும் இரண்டு முறை தடுப்பூசியை போட்டார். அந்த நோய்க்கு அமெரிக்காவில் இறந்தவர்கள் 12.2 மில்லியன் மக்கள். இந்தியாவில், மிகக் குறைவாக, 5.3 லட்சம் பேர்கள். அமெரிக்காவின் நோய் தொற்று மற்றும் இறப்பு விகிதத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் 4.5 கோடி பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்க வேண்டும். 45 லட்சம் பேர்கள் இறந்திருக்க வேண்டும். ஆனால் இறந்தது 5.3 லட்சம் பேர்கள்.

இந்தியா மிகக் குறைந்த விலையில் தடுப்பூசியை பல நாடுகளுக்கு வழங்கியது. இந்த செயல் உலகின் பாராட்டை பெற்றது. பொருளாதாரத்தில் முன்னணி நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் தீநுண்மீ தாக்கத்தில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியாமல் இருக்கும்போது இந்தியா அந்த பாதிப்பிலிருந்து மீண்டு விட்டது மட்டுமின்றி வேகமாக வளரும் பொருளாதாரமாக பிரகாசித்து வருகிறது. உலக விவகாரங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை ஏற்படுத்தும் நிலைக்கு இந்தியா வந்துள்ள நிலையில் அதன் தேசநலன்களை பாதுகாக்கும் திறனும் வளர்ந்துள்ளது.

ரஷ்ய – உக்ரேன் போர் வெடித்த போது மோடி துணிச்சலாக நடுநிலை என்ற – உண்மையில் அது ரஷ்ய ஆதரவு – நிலைப்பாட்டை மேற்கொண்டார் . ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்ய ராஜதந்திரமிக்க துணிச்சலான முடிவினால் அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதிக்க முடியாமல் போனது . இந்தியாவின் மீது அதிருப்தி அடைந்தது.

மோடி தனது செல்வாக்கினாலும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் தனக்கிருந்த நெருக்கமான நட்புறவினால் அமெரிக்காவின் கோபத்தை, அதிருப்தியை வெகுவாக தணித்து விட்டார்.

மோடி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்காமல் இருந்திருந்தால் உலகில் எண்ணெய் விலை விண்ணை முட்டி இருக்கும். ஏற்கனவே தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ள உலக பொருளாதாரம் எழ முடியாதபடி மேலும் வீழ்ச்சி அடைந்திருக்கும்.

உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் ஆதிக்க சக்திகளை ஓரம் கட்டி விட்டு நடுத்தர சக்தி கொண்ட நாடுகள் எழுச்சி பெற்றன. உக்ரைன் பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது மோடி ஜி 20 நாடுகளின் தலைமையை ஏற்றார். அந்த அமைப்பின் செயல்பாடுகள் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்து வந்ததை மாற்றி மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளாக 250 கூட்டங்களை இந்தியாவெங்கும் நடத்தினார். இது ஜி 20 யின் தோற்றத்தையே மாற்றி அமைத்தது. அடுத்து தலைமை ஏற்ற பிரேசில் நாட்டை, இந்தியா போல் செயல்பட முடியுமா என்று, வியக்க வைத்துள்ளது.